புவி வெப்பம் மோசடியா?
அங்காரகனை விட அமெரிக்காவில் அதிகக் குளிர். ”பூகோளம் வெம்மை அடைந்தால் நாம் இருக்கும் இடத்தில் சூடுதானே அதிகரிக்க வேண்டும்! அமெரிக்காவை கடுங்குளிர் தாக்கக் கூடாது அல்லவா?” என்று கேட்பவர்களுக்கு எப்படி பதில் சொல்வது என சொல்லித் தருகிறார்கள். ஆர்க்டிக் பெருக்கத்தினால் பனிப் பாறைகள் உடைந்தது அந்தக் காலம். இப்பொழுது பனி மலைகளே உருகி விட்டன.
http://qz.com/163636/how-global-warming-can-make-cold-snaps-even-worse/
oOo
நியு யார்க்கில் கூடும் உலக சங்கீதம்
இணையம் வந்த பிறகு உலக இசையைக் கேட்பதில் எந்த வித சிக்கலும் இல்லை. ஆனாலும், இசையை த் திரையில் பார்ப்பதை விட நேரில் அனுபவிப்பது கிறங்க வைக்கும். சங்கீதத்திலேயே மூழ்க வைக்கும். ஆண்டிற்கொருமுறை உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் கலைஞர்கள் ஒரே மேடையில் தங்களின் புதிய ஆக்கங்களை ஒலிக்கிறார்கள். ஆப்பிரிக்க சேர்ந்திசையையும் வேகப் பாட்டையும் கலப்பவர்கள் முதல் பூர்வகுடி வாத்தியங்களையும் அறுபதுகளின் ஹிந்திப் பாடல்களையும் புத்துருவாக்குபவர்கள் வரை, எல்லோருக்குமே இடம் தருகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் இருந்து சில பதிவுகளைக் இங்கே கேட்கலாம்.
http://www.npr.org/2014/01/16/263081652/what-makes-globalfest-so-interesting
oOo
பசி வந்தால் நீர்யானையும் உணவுத்தட்டில் ஏறும்
இப்படியெல்லாம் கதை எழுதினால், நம்பகத்தன்மையே இல்லாமல் இருக்கிறது என்போம். ஆனால், ஆவணப்படமாக எடுத்தால் எல்லா ஆதாரங்களையும் அடுக்கலாம். இரண்டு ஒற்றர்கள்; ஒரு ஜனாதிபதி; 1910ன் பஞ்சத்தைப் போக்க ஒரு சின்ன திட்டம்: நீர்யானைகளை இறக்குமதி செய்வது… கண்ட துண்டமாய் வெட்டி, கூறு போட்டு உப்பு கண்டம் தடவி உண்ணுவது. அமெரிக்காவின் வறுமைப்பசியைத் தீர்க்கும் செயல்பாட்டை தியோடார் ரூஸ்வெல்ட் கூட ஒப்புக் கொண்டதின் சுவாரசியமான பின்னணிகளைத் தெரிந்து கொள்ள மேலும் வாசியுங்கள்.
https://periodic.atavist.com/view/theatavist/story/199
oOo
அரசின் அடிமையாக இயங்கும் ஊடகம்: நெதர்லாந்து
மக்களுக்கு குரல் கொடுக்க, குடிமக்களின் பிரச்சினையை அரங்கிலேற்ற, செய்தித் தாள்களும், பத்திரிகைகளும் உதவுகின்றன. ருஷியாவிலும் சீனாவிலும் எதை வேண்டுமானாலும் தைரியமாக சொந்தப் பெயரில் அச்சிலோ இணையத்திலோ எழுத முடியாது. ஆனால், சுதந்திர மேற்குலகில் மிடையம் உதவியினால் நமது எண்ணங்களை பலருக்குக் கொண்டு செல்ல நான்காம் தூண் உதவுகிறது. கட்சிக்கொரு தொலைக்காட்சி வைத்திருப்பது தமிழகத்தில் ஊடகத்தின் நிலை. அமெரிக்காவில் ஆறு நிறுவனங்களின் கையில் மொத்த ஊடகமும் அடங்கியிருக்கிறது. இங்கிலாந்திலும் வெறும் பாவ்லா மாதிரி பல்லூடகம் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்படுகிறது. நீண்ட பாரம்பரியம் கொண்ட ஹாலந்து என்று அழைக்கப்பட்ட நெதர்லாந்தின் நிலையை இந்த அறிக்கை ஆராய்கிறது.