கடப்பாரை வைத்தியமும் ஜெட்ரோபா விதைகளும்

மண்ணின் மைந்தர்கள், சுதேசி அல்லது இந்தியத்துவம் என்று சொல்வது கோஷம் ஒலிப்பதுபோல் அரசியலாய்விட்டன. என்னவளம் இல்லை திருநாட்டில் என்றெல்லாம் எழுதினால் ஏதோ பெரிசு எழுதிவிட்டு Petrol_Alternate_Native_Fuel_Jatropha_Seeds_Energy_Natural_Biofuel_Sustainable_India_Researchபோகிறது என்றபடியே வரிகளை நகர்த்துபவரே அதிகம். ஆனால் ஒருவர் அல்லது சில அமைப்புகளும் தத்துவங்களும் மீண்டும்  மீண்டும் தேசம் என்றும் இயற்கையை ஒட்டிய வாழ்க்கை என்பதும் எத்தனை விதமாக சொன்னாலும் யாருக்கும் ஒரு அதிர்ச்சியான விஷயம் நடக்கும் வரை காதில் ஏராத செவிடன் போல் இந்திய சமூகம் ஆனதற்கு யார் காரணம் என்பது சொல்லபடவேண்டும். அதி முக்கியமாக இதைப்போல் பேசியும் எழுதியும் வருபவர்களை கண்டுகொள்ளாமல் விட்ட தமிழ்ச்சமூகம் நம்முடையது. இப்போதெல்லாம் வெள்ளையானைக்கு பிறகு முரணியக்கத்தை பேசி எழுதிவரும் கட்டுரைகளுக்கும் எழுத்துக்களுக்குமே கவனம் கிடைக்கிறது. இது எப்படி என்றால் “மாற்றம் என்ற ஒன்றே மாறாதது” என்றதை நம் சமூகம் நாம் மாறவேண்டியதில்லை மாற்றங்கள் நடக்கின்றன நாம் கவனித்து வந்தாலே போதுமானது என்று புரிந்துகொண்ட மரத்துபோன எண்ணங்கள்.

சரி தலைப்புக்கு தாவுவோமா? 1998-1999 வாக்கில் இந்தியாவில் நிகழ்ந்த பாய்ச்சாலான பல விஷயங்கள் நீர்த்து போகச்செய்தது ஏதோ தற்செயல் இல்லை. முக்கிய தொலைதொடர்பு விஷயங்கள் பாலிசிகள் ஏற்படுத்தபட்டது,  அணுசக்தி தொடர்பான மற்றும் மாற்று சக்தி விஷயங்கள் என்று பலவும் அதன் பலன்களை பல லட்சம் ஊழலுக்கு பிறகும் பலன் கொடுத்து வருகிறது. மங்கல்யான் முதல் மொபைல் வளர்ச்சி வரை இன்று அதை நீங்கள் கண்கூடாக  காணலாம். ஆனால் அதிகம் இருட்டடிப்பு செய்யப்பட ஒரு விஷயம் இந்த மாற்று சக்தி (alternative engery) என்பது வெளியே அதிகம் தெரியாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது.

அமெரிக்க நீதித்துறை ஊழல்களின் ஊடு சக்தி இந்த பெட்ரோலிய விலை என்பது புரிந்து கொள்ள அவ்வளவு சிரமம் இல்லை ஆனால் நம் எலும்பு துண்டு ஊடகம் எழுதாமல் விட்ட ஒரு விஷயம், எரிபொருள் தன்னிறைவு  என்பதை அமெரிக்கா அடைந்தது மிகவும் அமுக்கபட்ட விஷயம் அதே காலத்தில் நாம் அதிகம் பெட்ரோல் விலையால் அவதியுற்றது வலிந்து திணிக்கப்பட்டது, நம் எல்லா மாற்று எரிபொருள் ஆராய்ச்சிகளும் குழிதோண்டி  புதைக்க பட்டன. சமீபத்திய சிரியா மற்றும் ஈரான் எண்ணெய் விவகாரங்களும் ஜான் கேர்ரி உலக நாடுகளின் எதிர்ப்பால் சமாதான காவடி எடுத்ததையும் சேர்த்துதான் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவு ஏன் ஜனநாயகத்தை கூட ஆம் ஆத்மீ என்று இந்தியாவில் பரிசோதித்துதான் அமெரிக்காவில் உபயோகிக்க எடுத்து கொள்வார்கள். நாம் மலக்காகிதம் போல் ஆக்கப்பட்டு மண்ணோடு விதைக்கபடுவோம் மீண்டு எழுந்து வர இன்னும் ஒரு தலைமுறையாகும். ஏனெனில் இந்திய பணம் அறுபது மடங்கு கொடுத்தாதான் அமெரிக்க டாலர் வாங்க முடியும், ஆனால் இந்திய மனித உயிர்கள் அதைவிட மலிவு.

உதாரணத்திற்கு இந்த புங்கை மற்றும் இலுப்பை வித்துக்கள் அதன் தொடர்பான ஆராய்ச்சிகளும் தகவல்களும், சரிவர கொண்டு செலுத்தாத அரசும், என்று நாம் தெரிந்து புரியவேண்டியவை ஏராளம். புங்கை மற்றும் இலுப்பை நம் நாட்டிற்கே  உரித்தான மர வகைகள், இலுப்பை பூவை சர்க்கரை பற்றியும் கோவிலுக்கு விளக்கெரிக்க எண்ணை உபயோகித்த குறிப்புகள் பல இலக்கியங்களில் காண கிடைக்கின்றன. இலுப்பெண்ணை புகை பிடிக்காமல் மண்ணெண்ணை/ பெட்ரோலிய புகையை  சுவாசிக்க பிடிக்குமாறு ஆக்கிய மெக்காலே நரித்தந்திரத்தை என்னவென்று சொல்வது ? முன்பெல்லாம் கோவிலில் சண்டிகேசர் சன்னிதியில் இலுப்பெண்ணை வாடை வரும் என்று அந்த சன்னிதியை கடந்து  செல்பவர் உண்டு அதற்குத்தான் சண்டி சிவன் கோவிலின் கணக்கு பிள்ளை என்றும் நூல் பிரித்து காணிக்கை செலுத்தவேண்டும் என்றும், கை சொடுக்கி சப்தம் ஏற்படுத்துவது என்று குறியீடுகள் உருவாகி வந்தன.

நமக்கு கடப்பாரை வைத்தியத்தை மெக்காலே உதவி கொண்டு கொடுத்த கழகங்கள் கோவில்களை அறிவியல்பூர்வமாக ஊழல் செய்து கபளீகரம் செய்தபோது பார்த்து இருந்தது எந்த தலைமுறை? நமக்கு புகை வாடை பிடிக்கவில்லை என்றால் என்ன செய்திருக்க  வேண்டும் அறிவியலோ ஆயுர்வேதம் கலந்தோ வாடையை மணமாக்கும் முறைகளை கண்டு அடைந்திருக்க வேண்டும் அதை விடுத்து கடப்பாரை வைத்தியம் போல் எண்ணை தோண்டி எடுக்க இந்திய சோசியலிஸ அவமான  பெருந்தகை தொழில்களை முன்நெடுத்து சென்ற குடும்பங்கள் சுயராஜ்ஜிய காந்திக்கு செய்து காட்டியது என்ன ?

ஒமை என்ற இலுப்பை சுந்தரர் தேவாரத்திலும், அகநானூறில் யானை கோடையில் பிளந்த பாலை மரக்காட்டின் செறிந்த ஒமை மரத்தின் நீர் செம்மை குறித்தும் அறிந்தவர் தானே நாம்! பாலையில் காடுகளாய் கோடையிலும் நீர்  கிடைக்கும் மரவகைகளை பாதுக்காக்காது இருந்த தலைமுறையின் குற்றம் யாருடையது ?

மிகப்பெரிய தொடர்பு சங்கிலியை பிய்த்து எரிந்தவர்களில் முதலில் தெறிபவர் தேசத்தின் மகா அவமானம் பொருந்திய காந்திய பாசாங்குதாரி நேரு என்பது சமூகத்திற்கு புரியவே பல காலம் ஆன நாடு இது. கோவிலுக்கு  விளக்கெரிப்பதன் மூலம், கோவில் நிலங்கள் முழு மூச்சில் மர வளர்ப்பில் இருந்திருக்க வேண்டும் அப்படியானால் மாடுகள் செக்கிற்காவும் எண்ணை பிண்ணாக்கிற்காக அதன் ஈடுபாடும், மிஞ்சிய கழிவுகள் மீண்டும்  வயலுக்கிற்கான உரமாகவும் எளிதான விவசாயமும் அதன் ஊடே மக்களின் கோவில் பண்டிகை கொண்டாட்டங்களும் என இருந்த ஒரு சமுதாயத்தை நினைத்து பாருங்கள்! நம் தாத்தா காலம் வரை வீட்டு வாசலில் இலுப்பெண்ணை விற்பனைக்கு வந்துகொண்டுதானே இருந்தது அதை சொல்லும் விதமாக இலுப்ப சட்டி என்று இன்றைக்கு உபயோகம் செய்கிறோமே அது எண்ணெய் இருப்பு வைக்கும் சட்டி (இருப்பு சட்டி=இலுப்ப சட்டி)  தான் முதலில். விளக்கெரிக்க எண்ணெய் சேமித்து வைப்பது முப்பாட்டன் பழக்கம். எப்படி இன்றைக்கு மாறி இருக்கிறது என்றதனை தெரிந்து கொள்வது நலம்.

புங்கை மரம் போய் மே பிளவர் மரங்களை சாலையோரம் வைத்தவர் மன நிலை என்னவென்று சொல்வது? புங்கை மரம் மண் அரிப்பை தடுக்கும் திறன் கொண்டது அதிக குளிர்ச்சியையும் தரும் மக்களுக்கு பற்றி எரியும் பூவை  ரசிக்கவேண்டும் என்றால் இருக்கவே நம்மிடம் இருக்கிறது கல்யாண முருங்கை (தீ மரம் !). சாலை யோரம் அசோகர் குளிர் நிழல் தரும் பழங்கள் தரும் மரம் நட்டார் என்று மட்டும் பாடம் படித்தார்கள் ஆனால் அழகை மட்டும்  கணக்கில் கொண்டு மே பிளவர் மரத்தை நடுகிறார்கள் அது பெரிய மழையும் புயலையும் தாங்காது நிழலையும் தேவையான அளவுதராது. அதேபோல தான் நாம் நாட்டு விதைகள் இருக்க காட்டாமணக்கை யாருடைய  பரிசோதனைக்காகவோ இந்திய செவிட்டு அரசு செயல்படுத்தியது

2003 வாக்கில் ஆரம்பிக்க பட்ட மாற்று எரிபொருள் ஆராய்ச்சிகள் பல விதமாய் இந்தியாவில் ஊற்றி மூடப்பட்டன அல்லது எல்லா இடை அறிதல்களும் கூட்டு களவாணித்தனத்துடன் திருடப்பட்டிருக்கும் என்பது அனுமானம்; எப்படி யோகா வெவ்வேறு பெயரில் அமெரிக்காவால் பேடன்ட் செய்யபட்டதோ அது போல. ஆனால் அமெரிக்காவோ எல்லாவற்றையும் நம் போன்ற நாடுகளில் தோல்வி என்று சொல்லிவிட்டு இன்றைக்கு அவர்கள் அதை  செயல்படுத்துகிறார்கள்; பார்க்க பின் இணைப்பு.

இந்திய அரசால் கோடிக்கணக்கில் செலவழிக்கப்பட்ட காட்டாமணக்கு திட்டங்களும்  விபரங்களும் அதன் பின்னும் நாம் பெட்ரோல் விலையை தீ போல் கொடுத்து சுமையால் முதுகொடிய செயல்பட்டது வரலாறா ? அவமானமா?

உலகம் முழுவது நாம் மிகப்பெரிய விவசாய கலாச்சார நாடாக அறியப்படுகிறோம் இந்திய மக்களில் இன்றும் மெக்காலே வழி அமெரிக்க காலனியத்துக்கு நேரடி அடிமையாகாமல் 60 % மக்களுக்கு மேல் விவசாயம் செய்து ஒன்று தன் வயிற்று பாட்டை பார்த்துக்கொள்கிறார்கள் அல்லது திட்டக்குழு தலைவர் அலுவாலியா சொல்லிய இருபத்தெட்டு ரூபாய் வாழ்க்கையில் பூச்சி மருந்து வாங்கி உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். மறைமுகமாய் எங்களுக்கு அடிமைகள் பத்தவில்லை எல்லாரும் விவசாயம் என்று சொல்லி இன்னும் அடிமையாகாமல் இருக்கிறீர்களே என்று வேலைக்கு நூறுநாள் – ஒரு கடப்பாரை திட்டம்; மண் மோகன் சிங் இன்னும் கூவி முழக்குகிறார் அதாவது விவசாயம் லாபம் இல்லை சீக்கிரம் அடிமையாக மாறுங்கள் உங்கள் மகன்களும் மகள்களும் நல்லவிலைக்கு விசா கொடுக்கப்பட்டு வெளிநாட்டில் விற்கபடுமாறு பாத்துக்கொள்கிறோம் என்று ஒரு கடப்பாரை. இந்த விட்டில் பூச்சிகளுக்கு அங்கேயும் நறுமணம் அடித்த சாக்கடை உத்யோகங்கள் தான் கொடுக்கப்படும் என்று தெரியாமல் பார்த்துக்கொள்ள அடிப்படை கட்டுமானங்களை உருவாக்கி வைத்துள்ள நாடுகளில் அரபுநாடுகளும் தென்கிழக்கு நாடுகளும் முன்னணி காலனிய கண்காணிகள் இன்று.

இன்னும் இந்த கடப்பாரை வைத்தியம் பற்றி உதாரணங்களை பார்க்கலாம், தமிழகத்தில் ஆறுகள் ஏரிகளும் கால்வாய்களும் மற்றும் பாசனங்களும் ஏராளம் இருக்கின்றன அதை செப்பனிடுகிறேன் என்று மத்திய அரசு நூறு நாளில் வேலை முடியும் என்று பணத்தை வாரி இரைத்தது விவசாய செய்பவர்கள் ஆண்கள் பெண்கள் என்று வித்தியாசமே இல்லாமல் எல்லாருக்கும் டாஸ்மாக் இருக்கே கொடுத்த பணத்தை சந்தோஷமாக்குவோம் என்று அமர்ந்துவிட்டதை ரகசியமாகவேணும் நாம் போய் பார்த்து தெரிந்து கொள்ளத்தான் வேண்டும், மாநில அரசு ஒன்றும் சளைத்தது இல்லை நாங்கள் பண்ணைக்குட்டை அமைக்கிறோம் என்று கழக குட்டைகள் பணக்குட்டைகளில் நீந்தி திளைத்தது. ஆனால் பொது மக்கள் தண்ணீர் விலைகொடுத்து பாக்கெட்டில் வாங்க வேண்டு  அரசே இரண்டு விதமான தண்ணீரை விற்கிறது ஒண்ணும் தாகத்தை சாந்தி பண்ணவும் மற்றொன்று ஆத்ம சாந்திக்காகவும். அதில் வரும் லாபம் கூட தொழில்முனைவோருக்கு போகக்கூடாது. இதைவிட கடப்பாரை என்ன வேண்டும்?

நாம் என்ன செய்கிறோம் என்றும் வீட்டிற்குள் போய்  பார்த்தால் எல்லாரும் செய்கிறார்கள் என்று மார்பில் தரைகளை காசு கொட்டி அமைத்துவிட்டு பிறகு வீட்டில் உள்ளவருக்கு கால் வலிக்கிறது என்று வீட்டினுள்ளேயே செருப்பு போட்டுக்கொள்கிறோம். அதை விட கொடுமை என்ன வென்றால் வீட்டில் உள்ள கழிவறை சுத்தம் செய்யமாட்டோம் ஆனால் அதற்கு மற்றும் ஒரு காலணி என்று காலனிய அடிமைகளுக்கு பஞ்சமே இல்லை. எலிசெத்த நாத்தம் வந்தால் என்ன செய்யவேண்டும் எலி எங்கு செத்து கிடக்கிறது என்று தேடி எடுத்து வெளியே எறிவதுதானே முறை அதை விடுத்து ரூம் பிரேஷ்னர்  அடித்து விட்டேன் இப்போது வாசனையாய் இருக்கிறது நீங்கள் உள்ளே வரலாம் என்பவர்கள் எத்தனை பேர்?

எரியும் ஜெட்ரோபா விதைகள்
எரியும் ஜெட்ரோபா விதைகள்

இதற்கெல்லாம் முன்னாளில் இருந்து எத்தனால் கலப்பதை ஆதரித்தும் அதன் விளைவுகளை பற்றியும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று இன்றும் அதே உரத்த குரலில் இருந்து வருகிறது ஆனால் கேட்கபடவில்லை. அமெரிக்கா சோளத்தை வைத்து பெட்ரோலை பிரித்தோய்ந்து விற்பனை செய்யமுடியும். ஆனால் நாம் நாட்டில் மட்டும் உலகவங்கி வழிபாட்டில்தான் கடவுள் கூட உலவ வேண்டும் அதுவும் அதற்கு நிறுவனங்களை அவர்கள் காசு கொண்டு அமைத்து விடுவார்கள் (டாலர் அறுபது மடங்கு பாருங்கள்!). பி ஆர் எஸ் என்பது அரசு சட்டகங்களை முடிவு செய்யும் ஒரு அமைப்பு அதற்கு ஃபோர்ட் பவுண்டேசனும் உலக பெருந்தனக்கார அறிவியல் புரட்சி நிறுவனம்  கூகிள்ம் தான் பண உதவி செய்யவேண்டும், அவர்கள் கூறுவதை நம் மாண்புமிகு எம்பி களும் எம் எல் ஏ க்களும் சட்ட மன்றத்தில் பிதற்றுவார்கள். இதை போன்ற ஜெட்ரோபா விதைகள் எங்கு உருவாகின்றன என்று இந்திய தனிமனிதர்களும் சமூகமும் கடைசி வரை அறியாமலேயே தொண்டை வரள கொள்கை கூச்சல் போடுவதை எலும்புதுண்டு ஊடகங்கள் பார்த்து கைக்கொட்டி உள்ளுக்குள் சிரித்து கொண்டிருக்கும். அந்த விளைவுகளின் பிணக்குவியல் மேல் அவர்கள் எழுதி காசுகூடபார்ப்பார்கள் அந்த லாபத்தை வெளிநாட்டு பங்குதாரர்கள் வாங்கி ஏப்பம் விடுவதை நாம் நினைத்து தியானித்து வைத்தியம் முடிந்தது என்று நாம் அடுத்த கட்டுரை படிக்க போகலாம்.

சுகபோதானந்தா ஒரு கட்டுரை முடிவில் சாத்வீகமாக ஒரு கேள்வியை வைத்து முடிப்பார் நீங்கள் சல்லடையா? முறமா? என்று ஒரு மாறுதலுக்கு நான் கேட்கிறேன் நீங்கள் கடப்பாரையா ? ஜெட்ரோபா விதையா ?

0 Replies to “கடப்பாரை வைத்தியமும் ஜெட்ரோபா விதைகளும்”

 1. உங்களது கட்டுரை அருமை..இருப்பு சட்டிக்கான விளக்கம் நான் அறிந்து கொண்டேன்
  அன்று எங்கள் ஊரில் இலுப்பை தோப்பு என்றொரு இடமிருந்தது.அதன் பொந்துகளில் ஏஏராளமாக கிளிகள் சப்தமிட்டுக் கொண்டிருக்கும்.. கீழே விழும் இலுப்பை பூக்கள் எங்கள் கால்களில் மிதிபட்டு மணம் பரப்பும்…
  இப்பொழுது நான் அந்த வழியே நடக்கையில் அப்படி எந்த மணமும் வீசுவதில்லை 🙁

 2. சொல்வனம் அவர்களே ;
  உங்களது தமிழ் நடை மிகவும் கடினமாக உள்ளது.நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை .ஆனால் அதை கொஞ்சம் எளிய நடையில் சொன்னால் எல்லோருக்கும் எளிதாக புரியும்.எல்லா மக்களையும் உங்கள் செய்தி அடையவேண்டுமானால் நிச்சயமாக சரளமான தமிழில் யாவருக்கும் புரியுமாதிரியிருந்தால் தான் உங்கள் முயற்சி வெற்றி அடையும்.
  எனக்கு தெரிந்தவரை ஆமணக்கு எண்ணெய் காலம்காலமாக உபயோகத்தில் இருந்து வருகிறது.தன் பெயரே விளக்குஎண்ணெய் .அத்ல்ருந்து டீஸல் தயார் செய்யமுடியுமென எப்பொழுதோ சொன்னார்கள் ஆனால் இந்த petroleum lobby இதனைஅதல பாதாளத்தில் அழுத்திவிட்டது.
  நம் மக்களே நமக்குஎதிராக செயல்பட்டால் யாரிடம் போய் முறையிடுவது ?
  உங்கள் அன்புள்ள ,
  பாலகிருஷ்ணன் .
  9849054860.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.