சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் – புத்தக விமர்சனம்

உலகெங்கும் தன் உள்ளொளியைக் காண எழுத்தையோ, கலைகளையோ, தத்துவத்தையோ, விஞ்ஞானத்தையோ அல்லது மதத்தையோ எவனெவனெல்லாம் தன் ஆளுகைக்கு உட்படுத்திக் கொண்டானோ, அவனெல்லாம் நம்மைச் சார்ந்தவன் என நம் மொழிக்கு மாற்றப்பட்டுவிட வேண்டும் என்கிறார். ’சிந்திக்கும் மனிதனுக்கு பாஷை உண்டு. உண்மையின் பாஷை இது. ஜே.ஜே அதைத் தேடியவன்’ என்கிறார் கதைசொல்லி.