மராத்தியில்: நாராயண் சர்வெ
ஆங்கிலத்தில்: வினய் தன்வட்கர்
நாராயன் சர்வே [1926-2010] மராட்டிய மொழியின் மிகச் சிறந்த கவிஞர். கட்டுரையாளர். காரல் மார்க்ஸ் கொள்கை மீது நம்பிக்கை கொண்டவர். சோவியத் அரசு விருது பெற்றவர்
ஆயுள்
எனக்கு தரப் பட்ட
முழு வாழ்க்கையும் தீர்மானிக்கப் பட்டதுதான்
பிறப்பின் போதே
எனக்கான வெளிச்சமும் கூட
புழுங்கியபடி
நிர்ணயிக்கப் பட்ட தெருக்களில் நடந்து
ஓதுக்கப்பட்ட இடத்தில் வாழ்ந்து
சொல்லப்பட்டதைப் பேசி
எனக்கான வாழ்க்கையை வாழ்ந்தேன்
விதிக்கப்பட்ட பாதையில் போனால்
சுவர்க்கம் போவோம் என்கிறார்கள்
எங்களுக்கென ஒதுக்கப்பட்ட
நான்கு தூண்களுக்கு
இடையில்
உமிழ்கிறேன் நான்
oOo
மராத்தி : பல் சீத்தாராம் மர்டேகர்
ஆங்கிலத்தில்: திலீப் சிட்ரே
பல் சீதாராம் மர்டேகர் [1909-1956 ] நாவல், சிறுகதை, நாடகம் கவிதை என பலதுறையிலும் பங்கு கொண்டவர். சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். நவீன உலகமே அவரது கவிதைகளுக்கான உரு.
இதுதான் ஒழுங்கு
இருட்டு உலகின்
ஒழுங்கு இதுதான்
இருட்டு இதயத்தின்
ஒட்டடைத் திரியாய்
ஒரு கருப்பு விமானம்
இருளில்
கருப்பு காற்றினூடே பரவுகிறது
சிவப்பு பச்சை என
எந்தக் குறியுமில்லை
கண்ணுக்குப் புலப்படாத போது
எப்படித் தொலைய முடியும்
எங்கே போனாலும்
நானே கூட்டாளி எனக்கு
என் கண்கள்
அத்தகு சுவர்களினூடே