(இணையத்திற்குள் ஆறு பேர் நுழைகிறார்கள். அப்பொழுது விதூஷகன் டிவிட்டர் கருத்து போல் இரண்டு வரிகளில் எழுதுகிறான்)

(ட்விட்டை படித்தாலும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இப்பொழுது இன்னொரு திரியில் ஜேம்ஸ் கேட்கிறான்.)
தேவந்தி : ஜேம்ஸ், இதைப்பற்றித்தான் இன்று காலை யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பு வரை, வெளிநாடு போய் வந்தவர்களிடம் ‘என்ன வாங்கினீர்கள்’ என்றுதான் கேட்பார்கள். யாராவது சிலர்தான் என்ன பார்த்தீர்கள் என்று கேட்பார்கள். போய் வந்தவர்கள் கேமே (Camay) சோப் கொடுத்தால்கூட சந்தோஷப்படுவோம்
90களில் வெளிநாடு போகும்போது ‘என்ன வாங்கிவரவேண்டும்’ என்று கேட்டால் ‘ஐயோ எல்லாம் இங்கேயே கிடைக்கிறதே. எதற்கு அங்கிருந்து’ என்பார்கள்.
இப்போ கேட்டால் ‘ஆமாம் அங்கிருந்து மேட் இன் சைனா’ பொருட்களை வாங்கி வருவேண்டுமாக்கும்’ என்கிறார்கள்.
ஒரு டாலர் = 63 ரூபாய், தெரியும்தானே. என்ன ஷாப்பிங் செய்ய?
ஜேம்ஸ் : உண்மைதான். 97ல் மலேஷியாவிலிருந்து திரும்பியபோது அறை நண்பர்களுக்கு என்ன வாங்கிவந்தேன் என்று நினைக்கிறீர்கள் – டியோ ஸ்ப்ரேக்கள்!
என் மனைவி எப்போதுமே வாங்கி வரச்செல்வது, கறை நீக்கிகள்.
தேவந்தி : காப்பித்தூள் இங்கிலாந்திலிருந்தா? ஓ கொலம்பியா காப்பியா? அதெல்லாம் நம்மூர் பில்டருக்கு சரிப்படுமா?
டீ பற்றிச் சொல்லி ஏன் என் வயிற்றெரிச்சலைக்கொட்டுகிறிர்
நான் வெறுமே நம்மூர் ப்ளாக் டீ -ப்ரூக் பாண்ட் ரெட் லேபலில் வருமே அதுவோ அல்லது டெட்லி மசாலாவோ கடை கடையாய் ஏறித் தேடித் தேடி இளைத்தேன் போங்கள். கடைசியாய் ஒரு கடையில் இந்தியன் டீ என்று கண்டு பிடித்தால் அதில் 200 பாக்கெட் இருந்தது. அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய?
அடுத்தமுறை அமெரிக்கப் பயணம் என்றால் முதலில் ஒரு பெரிய பாக்கெட் டெட்லி மசாலா வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று டயரியில் எழுதி வைத்திருக்கிறேன்.
என்னதான் ஸ்டார்பக்ஸிலும் சியாட்டில்ஸ் பெஸ்ட் காஃபியிலும் உயர்ந்த வகை காப்பிகள் கிடைத்தாலும் நம்ம ஊர் மக்கள் அங்கேயும் போய் பேஷ் பேஷ் நரசூஸ் சுவையைத்தானே தேடுகிறார்கள்! போன மாதம் கணவர் அமெரிக்காவில் மகன் வீட்டுக்குப் போகையில் கேட்டார்: ‘அங்கு டீஸண்ட் காப்பி கிடைக்குமா? நான் வேண்டுமானால் ஒரு அரைக்கிலோ கோத்தாஸ் கொண்டுவரட்டுமா?’ என்று. பையன் சொன்னான்: one of my friends- a Chennai coffee lover has experimented with the coffee available here and discovered that a combination of Ethiopian Sidamo and Sumatra coffee (1:1)from Starbucks ground to a fine blend (“Turkish” grind for electric filter) tastes exactly like the coffee you get in Chennai.’
(இப்பொழுது இணையத்தில் பின்னிரவின் கருநீல ஒளி. சினிமாவில் சொர்க்கத்தைக் காட்டும்போது வெள்ளை மேகங்கள் தவழ்வது போல் தரையே தெரியாமல் போகிறது. நள்ளிரவு சுவர்க்கோழி சப்தம் ஆந்தையின் ஒலி. திடீரென்று பூதம் வருகிறது.)
பூதம் : காஃபி என்றால் வீட்டிலோ, அல்லது சில ஆர்கானிக் காஃபி விற்கும் கடைகளிலோதான் நல்லதாகக் கிட்டும். வெளிக் காஃபி கடைகளில் அனேகமாக மிகச் சுமாராகத்தான் கிட்டும். சில சமயம் அங்கும் நல்ல காஃபி கிட்டும், அது தற்செயல் நிகழ்வு.

கொலம்பியன் சுப்ரீமோ என்ற வகை அல்லது கொலம்பியக் காஃபிக் கொட்டைகளை ஒரு மினிமல் அடித்தளமாக வைத்துக் கொண்டு சுமத்ரா அல்லது எதியோப்பியா, கென்யா என்று வெவ்வேறு நாட்டுக் காஃபியைக் கலந்து பார்ப்பேன். இதில் என்ன விதமாக வறுக்கப்பட்டிருக்கிறது என்பதும் ஒரு ஃபாக்டர்.
அதே நேரம் பற்பசைகளில் இன்னும் சுரீர் உணர்வு அத்தனை குறையக் காணோம்.காப்பியே மேற்கில் கசப்பு கூடுதலாக இருக்க ஒரு காரணம், அவர்கள் இப்படி ஆல்கஹாலின் கசப்புக்குப் பழகிய நாக்குக்கு காப்பிக் கசப்பு ஒன்றும் பெரிய விஷயமில்லாததாக இருக்கும். இந்தியர்களில் ஒரு கணிசமான பகுதியினர் ஆல்கஹால் அருந்துவதில்லை என்பதால் காப்பி அத்தனை கசப்பாக இருக்கத் தேவை இல்லை.தவிர கசப்புக்கும் கஃபைன் அளவுக்கும் ஒன்றும் தொடர்பு அதிகமில்லை. கருக வறுக்கப்பட்ட ஃப்ரெஞ்சு ரோஸ்ட் காஃபி இருப்பதில் கசப்பானது- அதே போல வியன்னா ரோஸ்ட், இதாலியன் ரோஸ்ட் ஆகியனவும் கறுப்பு வறுப்பு. அவை எல்லாம் சற்றேறக் குறைய ஒருப்போல கசப்புக் காஃபி கொடுப்பவை. மாறாக கொலம்பியா, ஆஃப்ரிக்கா வகை வறுப்புகள் நடுவாந்திரமானவை- பழுப்பு நிறத்தில், தங்க நிறத்தில் வறுபடுபவை. இவை அரபுக் காஃபி என்றும் சொல்லப்படலாம். இவற்றை எல்லாம் விட மிக இலேசான பழுப்பில் ஒரு வறுப்பு வகை உண்டு. அதை இப்போது மைல்ட் என்றும் வணிக உத்திக்காக ‘blonde’ என்றும் சொல்கிறார்கள். ஸ்டார்பக்ஸ் இப்படி ஒரு வகையைக் கொஞ்ச காலம் விற்றுப் பார்த்தது.
இதில் நிறைய பேருக்குத் தெரியாத விஷயம் – கருப்பு வறுப்பு உள்ள காஃபிக் கொட்டைகள் கசப்பான கஷாயத்தைக் கொடுத்தாலும், அவற்றில் உள்ள காஃபைன் அத்தனை அதிகம் இல்லை. நிறையக் குடித்தால்தான் அதிர்ச்சி தருமளவு இருக்கும். அல்லது பால் கலக்காமல் நேரே குடிக்க வேண்டி இருக்கும். அதனால்தான் ஃப்ரெஞ்சு, இதாலியன், வியன்னா ரோஸ்ட் காஃபி குடிப்பவர்கள், எஸ்ப்ரஸ்ஸோ, டர்கிஷ், அல்லது கடுங்காஃபியாகக் குடிக்கிறார்கள்.
ப்ளாண்ட் அல்லது மிதமான வறுப்பு உள்ள கொட்டைகளில் இருப்பதில் காஃபைன் அதிகம்.
விதூஷகன் :The auto correct in iOS 7 is killing me. It corrected காபி as காலி.
உங்களுக்குத் தெரியுமா? இந்த ஞாயித்துக்கெழமை தேசிய காபி தினம்.
ஜேம்ஸ் : பிரபஞ்சனின் ஒரு கதையில் கும்பகோணமோ அல்லது பாண்டிச்சேரியோ – ஒரு பில்டர் காபி குடித்துவிட்டு சற்று நேரம் கழித்து இன்னொன்று சொல்வார் – காபி மாஸ்டருக்கு அது பெரிய அங்கீகாரம்…
Sunday is national coffee day என்று எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?
தேவந்தி : ஸ்டார்பக்ஸில் காப்பிக்கு நின்றபோது நோட்டீஸ் பார்த்திருப்பார். முழு குடும்பத்துக்கும் காப்பிதினத்தன்று அன்லிமிடட் காப்பி 4.99 க்கு என்று!!
இதுவல்லவோ கஸ்டமர் ஸர்வீஸ்!!)

பேராசிரியர் கேசவன் : இங்கு கொஞ்சம் காஃபி தயாரிப்பு குறிப்புகள். இப்படி ஒரு தயாரிப்பு முறை உண்டு- நெபாலிடானோ. இது ஃப்ரெஞ்சு முறை என்றும் சொல்கிறார்களாம்
காலையிலும் இப்படி ஒரு முறை நடந்திருக்கும்.அப்போதுதான் கறந்த பசும்பாலைக் காய்ச்சி அதில் புது டிகாக்ஷனை ஊற்றிக் கலந்த காப்பி. அதற்கு முன்னே ஸ்டார்பக்ஸெல்லாம் கடையை மூட வேண்டியதுதான்.
பூதம் : அதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று அன்று காஃபிக் கொட்டைகள் இன்றை விட ஆரோக்கியமான மண், சூழலில் வளர்ந்த செடிகளின் விளைவு. அனேகமாக நவீன தொழில் முறை உற்பத்தி இல்லாது, சூரிய வெப்பத்தில் உலர்த்தப்பட்டு காய்ந்த கொட்டைகளாக இருந்திருக்கும். இன்று எல்லாம் உலர் கொட்டகைகளில், பெரும் எந்திரங்களால் உலர்த்தப்படும் கொட்டைகளாக இருக்கவே வாய்ப்பதிகம்.
தவிர உள்நாட்டு உற்பத்தி உள்நாட்டிலேயே பெருமளவு விற்கப்பட்டிருக்கும். இன்று மூன்றாம் தரக் கொட்டைகளே உள்நாட்டில் விற்கப்படுகின்றன.
பேராசிரியர் கேசவன்: இங்கே ஒருத்தர் ‘அறிவியல் சோதனை’ செய்து எது நல்ல காஃபி தயாரிக்கிற முறை என்று கண்டிருக்கிறாராம். களிமண் காலில் நிற்கிறார் – குடிப்பவர்களில் எத்தனை சதவீதம் ஒன்றை நல்ல காஃபி என்று சொல்கிறார்கள் என்பதுதான் தீர்மானிக்கிறதாம். என்னைப் போல இன்ஸ்டண்ட் காஃபியே போதும் என்பவர்களுக்கு மேற்படி காஃபிகள் எதைக் குடித்தாலும் ஒன்றே போலவோ, அல்லது ஏதாவது ஒன்றை அவசரமாகத் தேர்ந்தெடுத்து விட்டுப் போகவோதான் தோன்றும்.
மேற்படி கட்டுரையாளர் விதந்தோதும் ஏரோப்ரஸ் என்ற கருவி என்னவாம்? அது இங்கே விளக்கப்படுகிறது.
பூதம்: கா நா சுப்ரமணியம் எழுதிய பொய்த்தேவு நாவலை படித்ததுண்டா? காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கத்தை ராயர் வைத்திருக்கிறார். உடனே அந்த குறிப்பைத்தொடர்ந்து “அந்த ஊரிலேயே அவர் ஒருவர் தான் காலையில் காபி குடிக்கும் பழக்கம் கொண்டவர்” என்றும் வருகிறது. இதைப் பார்த்து திராவிட ஆராய்ச்சியாளர்கள் கூட “அந்த காலத்தில் காபி இல்லை” என்கிறார்கள்.
பேராசிரியர் கேசவன்: இந்த மாதிரி முட்டாள்தனமான காஃபி செய்திகள் நிறையப் பார்க்கலாம்.
பாஸ்டன் பாலாஜி: முந்தாநாள் நியு யார்க்கின் ஜார்ஜ் ஏரியில் பின்மதியம் நான்கரை மணிக்கு குளம்பி வாங்குவதற்காக ஸ்டார்பக்ஸ் சென்றிருந்தேன். எனக்கு முன்னால் இருந்தவன் ‘கால் ஸ்பூன் சர்க்கரை; 1/2 & 1/2 பாதி; மீதத்திற்கு 2% பால்; அதி சூடு டிகாசன்’ என்று அனுபவித்து தனக்கு வேண்டிய காபியின் பாகங்களை விரிவாக சொல்லி முடித்தான். சொல்லி முடித்த அடுத்த நொடியே படு கோபமாக ‘எனக்கு ஏற்கனவே உங்க ஊரில் பார்க்கிங் டிக்கெட் ஒரு தடவை கொடுத்துட்டாங்க… சீக்கிரம் கலந்து கொடுங்க… உங்க தயவில் இன்னொன்றை உங்க குக்கிராமத்துக்குக் கொடுக்க தயாராக இல்லை’ என்று கடுமையாக சுடுசொல் உதிர்த்தான். அவனை கண்டிக்க மனசு முயன்றாலும், ஜிம்முக்கு போய் வளர்த்த ஆஜானுபாகத் தோற்றத்தைப் பார்த்த மூளைத் தடுத்து நிறுத்தியது.
அவனுக்கு கொட்டை வடிநீர் வழங்கிய பிறகு, தேவையில்லாத சாடலுக்கு உள்ளான காபி தயாரித்து வழங்குபவர்களைப் பார்த்து ‘That was rude’ என்று பகிர்ந்தவுடன் மனசு லேசானது.
சில சமயம் காபி வாங்கிக் கொண்டு கதவருகே செல்பவர்களின் காதிலும் உன்னுடைய மறுமொழிகள் விழலாம். அதனால், சாக்கிரதையா சொல்லணும்.
பேராசிரியர் கேசவன்: KOPI LUWAK அல்லது CIVET COFFEE என்பதைப் பற்றி இன்று பேப்பரில் படித்தேன். காப்பிக்கொட்டையைத் தின்னும் புனுகுப் பூனையின் கழிவிலிருந்து எடுக்கப்படும் காப்பிக்கொட்டைகளில் செய்யும் காப்பியாம். (ஐயையோ, கர்மம்!) இதன் விலை ஒர் கப்புக்கு 60 $!
ஜேம்ஸ்: குடிக்காதே தம்பி குடிக்காதே என்கிறார்கள். எனக்கு 107.93 கோப்பை குடித்தால் சங்கு என்கிறார்கள். அப்படியானால் என்னுடைய எடை எவ்வளவு!?
பாஸ்டன் பாலாஜி: இப்போ எல்லாம் காபிக்கடையில்தான் திருடர்கள் ஜாஸ்தியாயிட்டாங்க. எல்லோரும் இலவச இணையத்திற்காக அங்கேயே குடியிருக்காங்க. அப்போ, அங்கே வலையை எப்படி பயன்படுத்துறாங்க, என்ன மடல் பார்க்கிறாங்க என்பதையெல்லாம் கன்னக்கோல் இல்லாம கம்பியில்லா வலைப்பின்னலில் பார்த்து நம்மோட பாஸ்வோர்ட்களை கண்டுபிடிச்சுடறாங்க. இதை மையமா வச்சு, அமெரிக்க எக்ஸ்பிரஸ் கூட நிறைய விளம்பரம் செய்யறதப் பார்த்தேன்.
விதூஷகன் : நடிகர் சிம்பு பாடலாசிரியாக இருந்த “வேர் இஸ் தி பார்ட்டி” – பாடலில் கூட காபியைக் குறித்து இரட்டுற மொழியும் கவிதை புனைந்திருக்கிறார்.
வீட்ல இருந்து போகும்போது எல்லாத்தையும் மறைக்கிறாங்க
பப்புல பார்த்தா எல்லாத்தையும் குறைப்பீங்க
உன்ன குத்தம் சொல்லாதே
சந்தோசத்த கொல்லாதே
என்னதான் நாடு முன்னேறினாலும் திருடர், தாதா, முரடர்களின் பயம் அதிகரித்துள்ளது. அதனால், வீட்டுக் கணினியில் குக்கீ, ஹிஸ்டரி, கேச் எல்லாம் அவ்வப்போது கவனமாக நீக்கி பவ்யமாக மறைக்கிறார்கள். ஆனால், காபிஷாப் கணினியில் மேய்ந்தாலோ, இதற்கு நேர் மாறாக தவணை அட்டையைக் கூட பயன்படுத்தும் உலகம். அங்கே உலாவும் கொந்தர்களிடம் அடையாளத்தை இழக்கும் கொடுமையை என்னென்று சொல்வது! இதன் பிறகு என்னை குற்றம் சொல்லாதே. பணத்தை பறிகொடுத்து வங்கிக் கணக்கையும் தானம் வார்த்து தலையைக் குனியாதே!
****
pnramchandran
Sep 20
to Vikram
Dear Sir:
I read with interest your blog in corporate dossier of 20 Sep 2013. I am 88 years old and I give below some of my own experience in relation to this subject.
Western coffee filters using medium grind. We found it difficult to get coffee of our own taste while staying at Washington DC and Toronto. So we used to buy half roasted coffee seeds from departmental (grocery) stores and roast them again at home to our standard!
Another reason for adding chicory to coffee powder is that it increases the quantity required for large family gatherings etc.
“Degree” coffee of south India requires a separate article, so also Brahmins’ coffee clubs in that region, much to the annoyance of Periyar and his followers!
Suggestion by colonel Kenney-Herbert to pour in hot water in teaspoonfuls – Even today my wife pours hot water into the filter slowly by soup spoons etc. all around the filter and not in one lot.
My father had great fancy for coffee going in always for the latest brand powders marketed by T Stanes & Co.
Tea Board propagated tea into the households in Madurai by free distribution in 1940 and Coffee Board did so in Bangalore in 1943 or thereabouts. The Wavell Coffee Canteen at Bangalore Cantt station used to serve free coffee to soldiers in uniform.For public Coffee Board vans used to sell coffee half cup at half anna and full cup at three-quarters anna.
Best wishes and best coffee drinking for you!
P N Ramachandran
Bangalore
Vikram Doctor
Sep 20
to me
Dear Mr.Ramchandran
Many thanks for your mail. It is always good to have evidence that coffee drinking and good health can go together, as you demonstrate at your age with so many years of drinking coffee!
It is interesting to know that your wife adds hot water in spoonfuls. I have come across a lot of advice on the proper way to pick, roast and grind beans, but this is the first on how to add water. Mostly I’ve seen people adding it all at one shot, but it is possible this is really a source of big difference and I am going to try it out soon.
I didn’t know about the Wavell Coffee Canteen and the public coffee vans, most interesting.
thanks again for your mail,
Vikram
Dear Sir,
Why not get the Franchise for Kumbakonam filter coffee,You get KDFC in Tamilnadu for every 3 KM, with mrukku, thattai, Soodu Bhajji , Bonda biscuits. Open one in US.