தற்போது இந்தக்கலை முற்றிலுமாக அதன் தொன்மையை இழந்து நிற்கிறது. எல்லா வகை ஒலிகளையும் CD, DVD மற்றும் கணினியில் ஏற்றி கொண்டு வந்துவிடுகிறார்கள். அன்று காட்சிக்கு தேவையான ஒரு குறிப்பிட்ட ஒலியை ஒலிக்கலைஞன் ஏதோ ஒரு வழியில் உருவாக்கி தந்துவிட்டால் அவனுக்கு அந்த படத்தின் இயக்குனரும், ஒலிப்பதிவாளரும் தரும் பாராட்டுகள் அந்த கலைஞனுக்கு பல தேசிய விருதுகளை பெற்ற மகிழ்வை தரும். நான் உதவி இயக்குனராக இருந்த காலகட்டங்களில் வாழ்வாதாரத்திற்காக இந்தக் கலைஞர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன். நாயகன், அக்னிநட்சத்திரம் போன்ற படங்கள். எனது நினைவில் திரு.வைரம் என்ற ஒரு மிக மூத்த ஒலிக்கலைஞரின் சாதனைகள் பற்றி அன்று எல்லோரும் வியந்து பேசிக்கொண்டிருப்பார்கள்.
அழகம்பெருமாள்