மஞ்சள் ஃப்ராக் கடவுளும் நானும்

India- girl looking over mother's shoulder
கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையைத் தளர்த்திக்கொண்டிருந்தது
அந்த நீண்ட தரிசன வரிசை
கட்டப்பட்ட கால்களைக் கைவிட்டு
பிரகாரத்தைச் சுற்றத்தொடங்கின கண்கள்
களவுபோகும் கழுத்துச்சங்கிலிக்கு
கடவுள் பொறுப்பல்ல என்று
அறிவித்தபடி இருந்தது ஒலிப்பெருக்கி
வானில்
வால்நட்சத்திரம் தோன்றிய தருணம் ஒன்றில்
என் முந்தானையைப் பிடித்து இழுத்தார் கடவுள்
பால்ஊறும் கன்னக்குழியில்
என் பார்வையைப் பறித்து அமிழ்த்திவிட்டு
அந்த தோள்களுக்குப் பின்னே மறைந்துகொண்டார்
அவரது உள்ளங்கை தழுவி
இதழ் பதித்த வேளையில்
என் ஊழி தீர்ந்ததாய் உறுதி சொன்னார்
பின் கடவுளும் நானும் சேர்ந்து சென்று
கற்சிலை ஒன்றைக் கண்டு வந்தோம்

0 Replies to “மஞ்சள் ஃப்ராக் கடவுளும் நானும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.