
கரீமா உடன் ஒருபேட்டி:
oOo
சீனாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் திபெத்திற்கு சென்று அங்கிருக்கும் புத்த மடாலயங்களில் தங்கிய அனுபவத்தை ஜெஃப்ரி பதிவாக்கி இருக்கிறார். உயிர் வதையே கூடாது எனும் கொள்கையில் நம்பிக்கையுடைய புத்த பிக்குகள் ஏன் தீக்குளிக்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரையில் ஆராய்கிறார். ஒரு பக்கம் சீனாவின் ஹன் இனத்தினவர்கள் குடியேற்றம். இன்னொரு பக்கம் பல்லாயிரக்கணக்கான பாரம்பரியம் மிக்க பழக்கவழக்கங்களையும் தொன்றுதொட்ட நம்பிக்கைகளையும் நசுக்கும் நிர்வாகம். இதில் மாட்டிக் கொண்டு மில்லியனுக்கு மேற்பட்ட திபெத்தியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பரம்பரைத் தொழிலான விவசாயம் நசுக்கப்படுகிறது. எத்தகைய நெருக்கடிக்கு தங்கள் சொந்த இனம் உள்ளானால், தனது தியாகச் செயலால், உலகின் கவனம் திபெத் மேல் குவிந்து அதனால் தங்களுக்கு விடிவுகாலம் பிறக்காதா என எண்ணும் கையறு நிலையை படம்பிடித்துக் காட்டி இருக்கிறது இந்த நியு யார்க்கர் கட்டுரை.
– http://www.newyorker.com/
oOo
அடுத்த முறை நீங்கள் டிஸ்னி சென்றால் நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம். நீங்கள் வீட்டில் இல்லை என்றால் குளிரூட்டப்படுவதற்கு மின்சாரம் செலவழியாது. விமானத்திற்கு இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கிறது என்று நீங்கள் பொய் சொல்லி க்யூவைத் தாண்ட முடியாது. கிருஷ்ணர் போல் கர்மசிரத்தையாக உங்கள் ரதமான காரை ஓட்டுகிறீர்களா அல்லது சல்லியன் போல் கர்வமாக அசிரத்தையாக செலுத்துகிறீர்களா என்பதைப் பொறுத்து காப்பீடு செலவு குறையும்… அதிகரிக்கும். இது எல்லாம் இன்னும் இருபதாண்டுகளில் சாத்தியம் அல்ல. இன்றே கடைப்பிடிக்கப் படுகின்றன. இவற்றினால் நமது அந்தரங்கங்கள் வெட்ட வெளிச்சமாகிறதா? தர்மசங்கடமான உண்மைகள் பகிரப்படுகின்றதால் சாதகமா அல்லது பாதகமா? எல்லோருக்கும் ஒரு வழி என்பது போய் பணம் படைத்தவருக்கும் நிறுவனத்தின் சொற்படி நடக்கும் குணசீலருக்கும் மட்டுமே நல்வழி என்றாகி விடுமா? இந்தக் கட்டுரை அலசுகிறது.
Another view of the Tibet:
Article by Kalaiarasan:
http://kalaiy.blogspot.in/2010/01/blog-post_02.html