சொல்வனத்தின் துவக்கத்திற்கும், இருப்பிற்கும், தொடர்ந்த வளர்ச்சிக்கும் உறுதுணையாய் இருக்கும் , புதிய வரத்துக் கால்வாய்களைச் சாத்தியமாக்கிக் கொண்டே இருக்கும் எழுத்தாளர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் குறிப்பாக – பல சமயங்களில் தாமதமான வெளியீடு, மேம்படுத்த வேண்டிய பிழை திருத்துதல் போன்ற களையப்பட வேண்டிய குறைகள் இருந்தும் – தொடர்ந்த ஆதரவு தரும் வாசகர்களுக்கு எங்கள் நன்றி.
“கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்” என்ற உணர்வோடு, “முடிவற்ற படிகளில்” நாங்கள் ஏறிக் கொண்டே யிருப்பதற்கு எங்களோடு கைகோர்த்துக் கொண்டு உடன் வரும் நீங்கள் ஒவ்வொருவருமே காரணம். இந்த பரஸ்பர நலம் விழையும், செம்மை நோக்கிய உறவு மகிழ்வோடு தொடரட்டும்.
ஆசிரியர் குழு
தொடர்ந்து சிறப்பான முறையில் சொல்வனம் இதழை நடத்திவரும் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றிடைய வேண்டுகிறேன்.
சொல்வனம் ஐம்பதாவது ஆண்டு இதழ் சிறப்பாக வர வாழ்த்துக்கள். 🙂
சில மாதங்களுக்கு முன்பு எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் இணையதளம் மூலமாகத்தான் எனக்கு ‘சொல்வனம்’ இதழ் அறிமுகமாகியது. ‘சிறிது நாட்களுக்கு புத்தகமே தேவையில்லை’ என்று முடிவுகட்டி, முந்தைய இதழ்களை எல்லாம் வாசிக்கத் தொடங்கி, கிட்டத்தட்ட அனைத்து இதழ்களையும் வாசித்து விட்டேன் என்று நினைக்கிறேன்.
முழுநேர அலுவல்கள், மற்ற பல சிக்கல்களுக்கு இடையிலும் முதல்தரமாக சொல்வனம் இதழை சிறப்பான முறையில் நடத்திக் கொண்டு வரும் சொல்வனம் ஆசிரியர் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!
திரும்பித் திரும்பி வாசிக்க வேண்டிய உன்னதமான தரத்தில் வெளிவந்துள்ளது சொல்வனத்தின் சிறப்பிதழ். இதற்கு எவ்வளவு சிரத்தையும், உழைப்பும் வேண்டியிருந்திருக்கும்! சொல்வனத்தின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுகள்; நன்றி.
கு.அழகர்சாமி
ஒவொரு இதழும் அறுசுவை உணவு போல் எப்போது அடுத்த பந்தி போடுவார்கள் என்று நாட்களை எண்ணும் அளவுக்கு சிறப்பாக உள்ளது. சீக்கிரம் 50பதாம் ஆண்டு வராத என்று உள்ளது. கடுமையான உழைப்பால் 5 ஆம் ஆண்டு கொண்டாடும் சொல்வனம் மேழும் பல வளங்கள் பெற்று வளர வாழ்த்துக்கள்!.