Dear Team Solvanam,
I appreciate and greet your tireless effort to bring the every issue with the best possible quality. I am happy and proud. I am yet to read this issue.
Jeyakumar from T.Kallupatty
o0o0o0o0o
நீர் அரசியல், கொள்ளை பற்றிய அருமையான கட்டுரையை மண்புழு சிற்றிதழ் கொண்டுவந்திருக்கிறது.
ஆரவார அரசியல், பகட்டான அடிமைத் தொழில் மோகம் என்று பலரும் சிந்தையற்றுக் கிடக்கையில் சிந்திக்க வைக்கின்ற கட்டுரை. இக்கட்டுரை ஆசிரியருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
சிந்தனை வறட்சி தமிழகத்தில் இல்லை எனும்போது புத்துணர்வு பிறக்கிறது.
அன்புடன்
நாக.இளங்கோவன்
o0o0o0o0o
அன்புடையீர்
வணக்கம்.
புன்னகை உலகம் – பல்சுவை இதழின் ஆசிரியர் சுசி.திருஞானம் எழுதுவது. சொல்வனம் அருமை.
பி.பி.எஸ் பற்றிய ‘பாடல்களில் அவர் தாலாட்டு’ கட்டுரை சிறப்பாக உளது. தாங்கள் அனுமதித்தால் புன்னகை உலகம் இதழில் வெளியிட விரும்புகிறோம்.
தங்கள் பதிலை எதிர்நோக்குகிறோம். நன்றி. வணக்கம்.
சுசி திருஞானம்
o0o0o0o0o