இந்தியக் கவிதைகள் – கன்னடம் – மம்தா சாகர்

s234

river
நதியினுள்ளே
நதியினுள்ளே
ஆகாயம் மேகம் குளிர்ந்த சூரியன்
குவிந்த என் உள்ளங்கைகளில் நதி.
என் கைகளை வீசினால்
நதி துளிகளாகச் சிதறி
ஆகாயம் மேகம் சூரியனாக
என் மேல் தெறிக்கிறது
உள்ளங்கை கிண்ணத்தின்
நீரை நான் பருகினால்
நான் அருந்தியது
நதியை ஆகாயத்தை மேகத்தை சூரியனை
சொல்லுங்கள் இப்போது
யாருக்குள் யார் ?

***

lw23

hide-n-seek
கண்ணாமூச்சி
இலை ஒன்று
மெள்ள மெள்ள
மரத்திலிருந்து
வழுக்கி சறுக்கி
ஊஞ்சலாடி காற்றாடியாகி
காற்றைத் தழுவி விழுந்து
நீரின் மேல் தோணியானது
வண்ண வண்ண மீன்களுடன்
தங்கமய நீரலையின் மேல்
பச்சை ஒளிக்கீற்றாக மின்னி
சரசரவென கண்களிலிருந்து தப்பி
நீரின் ஓட்டத்தில் மறைகிறது
நீருக்கும் தெரியவில்லை
மீனுக்கும் தெரியவில்லை
காற்றுக்கும் தெரியவில்லை
மரத்துக்கும் தெரியவில்லை
இந்த கண்ணாமூச்சி ஆட்டம்

***

t20

என்mother தாய்க்கு
அவள் தலையை உயர்த்திப் பார்க்கையில்
ஆகாயம் முழுக்க பிரகாசம்
அவளின் கண்களில் மேகங்கள் மிதக்கின்றன
அவளின் கண்கள் மூடும்போது
ஆகாயம் இருளில் மூழ்குகிறது
மேகங்கள் உடைந்து துக்கமழை பொழிகிறது

***

mamta-sagarகன்னட கவிஞரும் கன்னட நாடக ஆசிரியரும் ஆன மம்தா சாகர் கட்டுரை, விமர்சனம், பத்தி எழுத்தாளர் என பல பரிமாணங்களைக் கொண்டு தொடர்ந்து இயங்கி வருபவர். மூன்று கவிதைத்தொகுதிகள், நான்கு நாடகங்கள் வெளியாகியுள்ளன. இவருடைய கவிதைகள் இந்திய மொழிகளிலும், பல்வேறு உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.மொழிபெயர்ப்பாளராய் கன்னட மொழிக்கும் ஆங்கிலத்துக்கும் சிறந்த படைப்புகளை அளித்துள்ளார்.