வாசகர் மறுவினை

ufo

சிவா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய ‘மணியம் செல்வன்‘ சிறுகதை மிக நன்றாக இருந்தது. வர்ணணைகள் அனைத்தும் அருமை. மன ஓட்டத்தை அப்படியே படம் பிடித்து அவருடன் கூடவே பயணம் செய்தவர்போல உணர வைத்துவிட்டார். படைப்புகள் தொடர்ந்து எழுதவேண்டும்.

இரா. கண்ணன்

*****

திரு.ராமன் ராஜா அவர்கள் செவ்வாய் பயண விபரங்களை அழகு நடையில் அனைவரும் ரசிக்கும்படி எழுதியிருக்கிறார்கள். சாவி அவர்கள் எழுதிய “வாஷிங்டனில் திருமணம்” புத்தகத்தை படிப்பதுபோல் கலகப்பாக இருந்தது. அறிவியல் செய்திகளை இதைவிட எளிதாகச் எவரும் சொல்லமுடியாது. இறுதியில் “சந்திரனில் போய் வசிக்கலாம் என்றால், அங்கே சொட்டுத் தண்ணீர் கிடையாது.” என்று முடித்திருக்கிறார். இதுதான் கொஞ்சம் இடிக்கிறது. ஏனென்றால் நமது சந்திரயான் பயணத்தின் சிறப்பே அங்கு துருவப் பகுதியில் நீர் இருப்பை கண்டுபிடித்ததுதான். ராமன் ராஜா சொன்னதுபோல் அங்கு சொட்டுத் தண்ணீர் இல்லை ஆனால் பனிப்பாறைக்கட்டி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

ஷாலி