வாசகர் மறுவினை

509
திரு. ச.திருமலைராஜன் சென்ற இதழில், புத்தக அறிமுகம் பகுதியில் – வாழ்வு தரும் மரங்கள் – ஆர்.எஸ்.நாராயணன் கட்டுரையை படித்தவுடன் கண்டிப்பாக இந்த புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியது. மிக அருமையாக எழுத்து நடை. அவர்க்கு என் வாழ்த்துக்கள். இதுபோல் தொடர்ந்து நிறைய பயனுள்ள தகவல்களைத்தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன்
இரா. கண்ணன்

    *********

ராமன் ராஜா ‘அப்பா, அம்மா,அம்மம்மா’ விஞ்ஞான கட்டுரையை மிக அழகாக எழுதியிருக்கிறார்.
நிறைய எழுத வாழ்த்துக்கள்.
வாழ்க சுஜாதா.
க்ருஷ்

    *********

வலி மிகுந்த பழமையின் ஞாபகங்கள்..மாறிக்கொண்டே இருக்கும் மாறுதலின் நெருடல்களில் சிக்கிக்கொள்ளாமல், இருந்ததின்,வாழ்ந்ததின்,சுவைத்ததின், மகிழ்ந்ததின் பதிவை இன்னமும் பதியவைத்திருந்தால்..ரசனையின் சுவை மிகுந்திருக்கும்.
குமிழும்,நாதங்கியும் பூட்டப்பட்ட கதவினுடனான சந்தோஷமும் , கடனுக்காகச் சிறை பிடிக்கப்பட்ட கதவின் மீதான,தொலைந்து போன சந்தோஷத்துடன் கூடிய
ஏக்கமும் நிறைந்ததுதானே வாழ்க்கை….!
பெருமாள் மகன்

    *********

சி. சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு- பகுதி 8 இளைய தலைமுறைக்கு நல்ல வழிகாட்டிகள் ஆசிரியருக்குப் பாராட்டுக்கள். தொடரட்டும் அதே போன்று புதிய கண்டுபிடிப்பாளர்களை திறமையான இளைஞர்களை அறிமுகம் செய்து அவர்களையும் ஊக்கப் படுத்துங்கள்
இந்தியன் குரல்
பாலசுப்ரமணியன்

    *********