த்வமேகம், கூனம்ம பதாலு என்ற இரு முக்கியமான கவிதை நூல்களும், சிறுகதைகள்,தெலுங்கு இலக்கிய வரலாறு, நாடகங்கள், ஆந்திராவின் சிவவாக்கியரான வேமனாவின் கவிதைகளைப் பற்றிய விமர்சனங்கள். எண்ணற்ற தெலுங்கு திரைப்பாடல்களுக்காகவும் படித்தவர்கள் பாமரரரஃகள் வேறுபாடின்றி மெச்சப்படும் ஆருத்ரா (பாகவதலு சதாசிவ சங்கர சாஸ்திரி(1925-1999)) தன் 17வது வயதில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்.
பேச்சு மொழியை தன் கவிதைகளில் கையாண்டவர். தெலுங்கு கவிதை இலக்கணத்தில் தேர்ந்தவரானாலும் கவிதை எளிமையாலும் இசைத்தன்மையாலும் எல்லோருக்கும் புரியும்படியுமிருக்கவேண்டுமென்ற கொள்கையுடையவர். மேஜிக், கைரேகையியல், பரதநாட்டியத்தில் ஹஸ்தமுத்திரைகள் என பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர்.
நாட்டியக்கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் கலந்தாலோசனைகளுடன் அது குறித்தும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ஆந்திர பல்கலைக்கழகம் கலாப்ரபூர்ணா விரிது அளித்து கொரவித்த்து. தெலுங்கு இலக்கிய வரலாற்று நூலுக்காக சாகித்ய அகாதெமி பரிசளித்துள்ளது.
பத்திரிகையாளராக விரும்பியவர். ஆனால் தெலுங்கு சினிமாவில் கதாசிரியராகவும் பாடலாசிரியராகவும் ஆனார்.
நீர்க்கடிகாரம்
நீ பயணம் செய்ய நினைத்திருந்த ரயில் வர
ஆயுட்காலம் தாமதமாகும்.
கணக்கற்ற வருடங்கள்
நீ காத்திருக்க முடியாதென்பதால்
எந்த ரயில் வந்தாலும் அதில் ஏறிக்கொள்.
டிக்கெட் பரிசோதகர் சொல்கிறார்
உன் பயணப்பெட்டிகள் அளவுக்கதிகமானவையென்று
உன் ஆசைப்பெட்டிகள்
ப்ரேக்வேனுக்குப் போகவேண்டுமென்றும்.
உன் பொருட்களை ஏற்றுமுன்
ரயில் நகர்கிறது
எனவே சிலவற்றை
உன்னைக் கவர்ந்த தலைவர்களிடம்
விட்டுச் செல்கிறாய்
ரயில் சென்றடையாது,
நீ போகவேண்டிய கிராமத்துக்கு
நீ உயிரோடிருக்கும்வரை.
கடவுளே! ஏனிப்படியெல்லாம் செய்கிறாய்?
எங்கிருக்கிறாயோ
அங்கேயே இரு.
புறப்படுமிடத்தில்.
ஆங்கிலவழி தமிழாக்கம் : லாவண்யா