தற்செயலாய் உருவான பிரபஞ்சம்

முன்பு விபத்துகளாகக் கருதப்பட்ட நிகழ்வுகளை, அடிப்படைக் கொள்கைகளுக்கும் காரணங்களுக்கும் உட்பட்ட நிகழ்வுகளாக நிலைநிறுத்துவதே அறிவியலின் வரலாற்றுச் செயல்பாடுகள். இதுவரை தெள்ளத் தெளிய விளக்கப்பட்ட நிகழ்வுகளோடு பட்டியலில் சேர்க்க வேண்டியவை இதோ: வானத்தின் நீல நிறம், கோள்களின் சுற்றுப்பாதைகள், ஏரியில் இயக்கப்படும் படகு விட்டுச்செல்லும் வழித்தடம் , உதிர்பனித்துகளின் அறுகோணப் பாங்கு, பறந்து செல்லும் வான்கோழியின் எடை, கொதிக்கும் நீரின் வெப்ப நிலை, மழைத்துளியின் பரிமாணம், சூரியனின் வட்டவடிவத் தோற்றம் எனப்பல.