பண்டிட் ரவிஷங்கர் (1920 – 2012)

சிதார் மேதை பண்டிட் ரவிசங்கர் இவ்வாண்டு டிசம்பர் 11ம் தேதியன்று தனது 92வது வயதில் காலமானார். இந்திய செவ்வியல் இசையை உலக அளவில் எடுத்துச் சென்று அதன் நவீன பரிமாணங்களும் வெளிப்படக் காரணமாக இருந்த இந்த தலைசிறந்த இசைக்கலைஞரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பெருஞ்சோகம். பண்டிட் ரவிசங்கரின் மறைவுக்கு சொல்வனத்தின் அஞ்சலி.