இந்த வாரம் தில்லி ஃப்ரெஞ்ச் கலாசார மையத்தில் பார்வையிழந்தவர்கள் மற்றும் பார்வைக் குறைபாடு உடையவர்கள் எடுத்த ஒளிப்படங்களின் கண்காட்சி நடைபெறுகிறது. இப்படங்களில் சிலவற்றின் தொகுப்பை பிபிஸி இணையதளம் வெளியிட்டிருக்கிறது. ஒலியின் நகர்வு, தொடுவுணர்வு ஆகியவற்றைக் கொண்டே எடுக்கப்பட்டிருக்கும் இப்படங்கள் வெகு நேர்த்தியாக இருப்பதோடு, பார்வையிழந்தவர்கள் உலகைப் பார்க்கும் விதத்தை ஓரளவுக்கு உணர்த்துவதாகவும் இருக்கிறது.
ஒளிப்படங்களை இங்கே பார்க்கலாம்.