வாசகர் மறுவினை

‘செந்தமிழ்க் காப்பியங்கள்’ கட்டுரையில் வரும் ஒரு வரி :

’14 மூலச்சுவடிகளை ஒப்பு நோக்கி, அரிதின் முயன்று, 1829-ம் ஆண்டு முதன் முதலாக வெளியிட்டார்.’

எனும் வரி தகவற்பிழையானது. அது 1892. சரிபார்க்கவும்.

http://uvesalibrary.org/collections.htm

Sathia

ஆசிரியர் : அன்பு Sathia, தகவலுக்கு நன்றி. பிழை திருத்தப்பட்டது.

-o00o-

இந்த இதழில் வந்துள்ள கவிதைகள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது.

http://solvanam.com/?p=21055

இடப்பெயர்ச்சி – எம்.ராஜா
பூஜ்யம், தோசை – லாவண்யா
கூ – ஃபைஸல் அஹமத்
காயங்களைப் பந்தாடும்
விளையாட்டு – ச.அனுக்ரஹா
நாய் கவ்வும் பந்து, அன்புடைமை
– கு.அழகர்சாமி

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன்
இரா. கண்ணன்

-o00o-

மிக அற்புதமான ஒரு வலைத்தளம். மிக போற்றுதலுக்கு உரிய ஒர் முயற்சி. தமிழை அறிவாற்றல் மொழியாக மாற்றும் ஒரு சாதனை. தமிழர் அறிவாற்றல் வெட்டிப்பேச்சுகளாலும் பட்டிமன்றங்களாலும் சீழ்ப்பட்டுகொண்டிருக்கும் ஒரு கால காட்டத்தில் ஒரு அருமையான உன்னதமான எதிர்வினையை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என் மனமார்ந்த் வாழ்த்துக்கள் வாழ்க தங்கள் பணி மென்மேலும் சிறப்புறுக

நந்தினி மருதம்
நியூயார்க்