வாசகர் மறுவினை

அன்புள்ள ஆசிரியருக்கு,

பிரகாஷ் சங்கரன் எழுதியிருந்த இந்தக் கட்டுரை மிக உபயோகமுள்ளதாக இருந்தது. அறிவியல் ரீதியாக துல்லியமான தகவல்கள் மட்டுமல்ல, இந்த மருத்துவ தொழில்நுட்பத்தின் சமூகத் தாக்கம், பக்க விளைவுகள், அவற்றுக்கான தீர்வுகள் ஆகியவற்றை அலசியதும் நன்று. அவர் சுட்டியிருந்த நியூ யார்க் டைம்ஸ் கட்டுரையை விடவும் கூட சிறப்பாக பிரசினையின் எல்லா பரிமாணங்களையும் எடுத்துக் கூறும் வகையில் இந்தக் கட்டுரை இருந்தது. வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ஜடாயு

-o00o-

சென்ற இதழில் திரு. வி.கணேஷ் அவர்கள் எழுதிய “மஷி பேனா” என்ற சிறுகதை மிக நன்றான இருந்தது. என் பள்ளி நாட்களை நினைவு படுத்தியது.

அருமையாக எழுத்து நடை. அவர்க்கு என் வாழ்த்துக்கள். நிறைய தொடர்ந்து எழுத வேண்டும்.

இப்படிக்கு,
இரா. கண்ணன்