ஒன்றுமில்லாததிலிருந்து உருவாகிய பிரபஞ்சம்

இந்த சொல்வனம் இதழில் கோரா மொழிபெயர்த்திருக்கும் லாரன்ஸ் க்ரெளஸ் எழுதிய கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. லாரன்ஸ் க்ரெளஸ் தன்னுடைய பிரபலமான புத்தகமான ‘A Universe from Nothing’ இன் சாரத்தை ஒரு விரிவுரையாகப் பேசுகிறார். அவருடைய நுட்பமான நகைச்சுவையுணர்வும், தெளிவான, எளிமையான விளக்கங்களும் இவ்வுரையை வெகு சுவாரசியமான ஒன்றாக்குகின்றன. இதே உரையில் லாரன்ஸ் க்ரெளஸைக் குறித்து அறிமுகப்படுத்திப் பேசும் பிரபல எழுத்தாளர் ரிச்சர்ட் டாகின்ஸின் சிறு உரையும் அருமையான, சுவாரசியமான ஒன்று.