வாசகர் மறுவினை

feather-pen-featured

அன்புள்ள சொல்வனம் ஆசிரியருக்கு,

இந்தக் கட்டுரையில் திரு. நாஞ்சில் நாடன் இப்படி ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார் –

// கால ஆராய்ச்சியும் கல்வெட்டு ஆராய்ச்சியும் எனக்கு தொடர்பற்றவை. ஆனால், எனது அடிப்படைக் கேள்வி எதற்காக கி.மு. அல்லது கி.பி. என்று குறிப்பிடப்பட வேண்டும்? கிறிஸ்து பிறப்பதற்கும் பத்தாயிரம் ஆண்டுத் தொன்மையும் வரலாறும் உடைய நாம் எதற்காக நமது காலத்தைச் சுட்ட Point of Reference ஆகக் கிறிஸ்துவைக் கொள்ள வேண்டும்?
இது என் மதம் பற்றிய பார்வை அல்லது அபிப்பிராய பேதம் என்று எவரும் கருதல் வேண்டா! கிறித்து பிறப்பதற்கு முன்பான இத்தகைய தொல் பாரம்பரியம் உள்ள நாம் எதற்கு நம் காலத்தை வரையறுக்க கிறிஸ்துவைச் சாட்சிக்கு அழைக்க வேண்டும்? //

உண்மையில் அழைக்க வேண்டாம், இப்போதைய வரலாற்று நூல் முறைமைகளின் படி.

நவீன யுகத்தின் தொடக்கத்தில் ஐரோப்பிய மையவாதமும், காலனியாதிக்கமும், கிறிஸ்தவ மிஷன்களும் கோலோச்சிய போது தான் பரவலாக நவீன நோக்கிலான வரலாற்று நூல்கள் எழுந்தன. அவற்றில் இயல்பாக ஐரோப்பியர் பயன்படுத்தி வந்த கி.மு, கி.பி காலக் கணக்கே இடம் பெற்றது.

பிறகு கிறிஸ்துவின் வரலாற்று அடிப்படை குறித்தே தீவிர ஆய்வுகள் நடந்தன. முன்பு நம்பப் பட்டது போன்று ஏசு கிறிஸ்து என்பார் குறித்த வரலாற்று சான்றுகள் எதுவும் துல்லியமாக, திட்டவட்டமாக இல்லை என்றே இந்த ஆய்வுகள் தெரிவித்தன. ஆயினும் இந்த ஆண்டுக் கணக்கு பல்லான்டுகளாக வரலாற்றாசிரியர்களுக்கு பரிச்சயமானதாக இருந்ததால், அதை அப்படியே வைத்துக் கொண்டு பெயரை மட்டும் மாற்றினார்கள். ஆங்கிலத்தில் BC (Before Christ), AD (Anno Domini – In the year of our Lord) என்பதற்கு பதிலாக BCE (Before Common Era), CE (Common Era) என்ற சொல்லாடலைப் பயன்படுத்தத் தொடங்கினர்…அதாவது, ஆண்டுக் கணக்கை, கிறிஸதுவை வைத்துக் குறிப்பிடாமல் “பொதுயுகத்திற்கு முன்பு”, “பொதுயுகத்திற்குப் பின்பு” என்று குறிபிட்டார்கள்.

கடந்த பல பத்தாண்டுகளில், உலக அளவில் ஆங்கிலத்தில் எழுதப் படும் எல்லா வரலாற்று நூல்களிலும் பொதுயுகம் என்று தான் குறிப்பிடுகிறார்கள். தமிழில் இது பற்றிய அறிதல் இன்னும் வந்து சேரவில்லை போலும். அதனால் பழைய பெயர்களையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கி.மு, கி.பி, என்பதற்குப் பதிலாக பொ.மு, பொ.பி. என்ற வழக்கை நாம் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். வரலாறு குறித்த எனது கட்டுரைகள் எல்லாவற்றிலும் அப்படித் தான் நான் எழுதி வருகிறேன்.

எனக்குத் தெரிந்த வரையில், தமிழக சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்), ஒருமுறை சட்டமன்றத்தில் இது குறித்து பேசியுள்ளார். பொ.மு,பொ .பி என்பதை தமிழக அரசு எல்லா பாடப் புத்தகங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரினார். பிறகு என்ன ஆயிற்றூ என்று தெரியவில்லை.

அன்புடன்,
ஜடாயு

-o00o-

//சொல்வனம் தொழில் முறையில் இல்லாத, வியாபார நோக்கு அற்ற, மனிதரிடையே பிரிவினை செய்யும்
எதையும் ஏற்காத, எளிமையும், உண்மைத் தேட்டமும் உள்ள, தங்களை முன்னிறுத்த முயலாத வெகு சிலரால் நடத்தப்பட்டு வருகிறது. சொல்வனத்தின் பல வேலைகளையும் இந்த சிலரே செய்கிறோம்.//

தோழமையுடன் உங்களுக்கு….

மேற்கண்ட உங்களது வாக்கு மிகச் சரியானது. இத்தனை இதழ்களாக சொல்வனம் சொல்லாமல் சொன்னதும் இதுதான். மிகுந்த முயற்சிகளோடு இதழை திறம்பட நீங்கள் தவறாது கொண்டுவந்துக் கொண்டிருப்பதை என் பத்திரிகை அனுபவத்தை கொண்டு வியப்போடு உணர்கிறேன்! உங்களது பெரிய சேவைக்கு என் மனம் நெகிழும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

தாஜ்

-o00o-

Thanks a lot to solvanam and thanks to the well known writer-author Ki.rajnarayanan for what I think is a rarest of rare type of article on one one of the ever to be remembered as a great Creator-setter of classical Carnatic music of India and that too on the now so famous instrument ‘nadaswaram’ made famous more by rajarathinam Pillai of thiruvavaduthurai Rajarathinam pillai may not be known to present day generation of Even south Indian origin.

He has to be remembered whenever one hears a nadaswaram as he may be truly called the creator of the greatness of this hard and difficult wind instrument made famous and concert-worthy of present day types of concerts lifting from the closed cell in which it was held in tamil nadu areas mostly during 20’s and even 30’s of 20th century.

Thanks to solvanam for an article of this type which reflects the Tamil culture in all its nativity.

N.Ramabhadran