ஒரு ஐ-பேட் மேஜிக்

ஐரோப்பாவின் பல பெருநகரங்களுக்கு பல உத்திகளைக் கையாண்டு நிறைய பணம் செலவு செய்து விளம்பரங்கள் செய்கிறார்கள். அதன் மூலம் நிறைய வணிக முதலீடுகளும், உலகளாவிய கவனமும், சுற்றுலா வருவாயும் கிடைக்கின்றன. இது ஆப்பிள் யுகம். ஐ-பேட் கருவியைக் கொண்டே ஒரு மேஜிக் நிகழ்ச்சி மூலம் ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமுக்கு ஒரு விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. வியக்கவைக்கும் அந்நிகழ்ச்சியை இந்தக் காணொளியில் காணலாம்.