அன்புள்ள வாசகர்களுக்கு…

india-national-highway-field-boy_49151_600x450

அன்புள்ள வாசகர்களுக்கு,

தங்கள் வாசிப்பும், தாங்கள் சொல்வனத்தின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையுமே எங்கள் மூலதனம், உந்து சக்தி.

‘கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பதில்’ எங்கள் பங்கை ஆற்றி வருகிறோம். முடிந்த வரை உயர்ந்த தரமான, செறிவான படைப்புகளைத் தருவதே சொல்வனத்தின் நோக்கம். போக வேண்டிய தூரம் வெகு அதிகம் என்பதையும் நாம் அறிவோம். இப்பயணத்தில் தங்கள் உறுதுணையே எங்கள் பேராதரவு.

சொல்வனம் தொழில் முறையில் இல்லாத, வியாபார நோக்கு அற்ற, மனிதரிடையே பிரிவினை செய்யும் எதையும் ஏற்காத, எளிமையும், உண்மைத் தேட்டமும் உள்ள, தங்களை முன்னிறுத்த முயலாத வெகு சிலரால் நடத்தப்பட்டு வருகிறது. சொல்வனத்தின் பல வேலைகளையும் இந்த சிலரே செய்கிறோம்.

சில குறைகளும் உள்ளன என்பதை உணர்கிறோம்:

  • தவிர்த்திருக்கக்கூடிய எழுத்து மற்றும் இதர பிழைகளை இன்னும் முனைந்து திருத்த வேண்டும்.
  • இரு வாரங்களுக்கு ஒரு முறை குறிப்பிட்ட தினங்களில் இதழ்களைத் தொடர்ந்து வெளியிடவேண்டும்.

இவ்விரண்டும் எங்கள் கவனத்தில் முதல் இடத்தில் உள்ளன.

ஆசிரியர் குழுவிலிருப்பவர்கள் தங்கள் அலுவலக வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியிருந்ததாலும், பயணங்களில் இருந்ததாலும், கடந்த இதழ்களை – குறிப்பாக சென்ற இதழை – வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதது. அக்கறையும், ஆர்வமும் உள்ள வாசக அன்பர்கள் அது குறித்து எங்களைக் கேட்கவும், தங்களுக்குள் பேசிக் கொள்ளவும் செய்தார்கள். இனி இரு வாரங்களுக்கு ஒருமுறை (வெள்ளியன்று) சொல்வனம் வெளிவர எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.

கடந்த தாமதங்களைப் பொருட்படுத்தாமல் எங்களுக்கு உற்சாகம் அளித்து வரும் உங்களுக்கு மீண்டும் நன்றி.

சொல்வனம் இன்னமும் சிறப்பாக வெளிவர தங்கள் ஆலோசனைகளை editor@solvanam.com என்கிற முகவரிக்கு அனுப்பலாம்.

நம் தொடர் மகிழ்ச்சிக்கும், மன நிறைவுக்கும் செயல்படுவோம்.

அன்புடன்
ஆசிரியர் குழு
சொல்வனம்