ஒற்றைப் புராணம் (Mono Myth)

நம் கல்விமுறை புராணங்களை எப்படி அணுகவேண்டும் என்று கற்றுக் கொடுத்துள்ளது. கிழக்கத்திய புராணங்களை ‘கட்டுக் கதைகள்’ என்றும், மேற்கத்திய புராணங்களை ‘விவிலிய உண்மை’ (bibilical truth) என்றும் அணுகச் சொல்கிறது. ஆனால் ஜோசப் கேம்பெல் எனும் புராணவியலாளர் புராணங்களை வெறும் கட்டுக்கதைகளாகவும், மூடநம்பிக்கைகளின் வெளிப்பாடுகளாகவும் மட்டுமே காணும் போக்கை முற்றிலும் நிராகரிக்கிறார். சமூகத்தின் தனி ஒரு மனிதனிடமும் கூட உரையாடக் கூடிய ஆற்றல் புராணங்களுக்கு உண்டு என்கிறார் கேம்பெல். மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய மதங்களின் புராணங்களை விரிவாக ஆராய்ந்து, அதன் செழுமையை உலகுக்கு உணர்த்தியவர் கேம்பெல்.

அவர் முன்வைத்த கோட்பாடு, ‘ஒற்றைப் புராணம்’ (mono myth). ‘உலகின் பல புராணங்களிலும், அதன் நிலம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றைத் தாண்டி, அப்புராணங்கள் அனைத்திலும் ஒரு இணைத்தன்மை உள்ளது’ என்பதுதான் இக்கோட்பாடு.

கீழே இருக்கும் ஒளிப்படத்தில் இவரது கோட்பாட்டின் படி நம் காலத்து புராணமான ‘The Matrix’ திரைப்படம் அலசப்படுகிறது.