[stextbox id=”info” caption=”அமெரிக்காவின் ஆயுத வணிகம்”]
மிகச் சிறு செயல்களும் மாபெரும் விளைவுகளுக்குக் காரணமாகலாம் என்று சொல்வார்கள். மகத்தான தவறுகள் எவ்வளவு பெரிய குற்றங்களுக்குக் காரணமாகலாம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எல்லாவற்றுக்கும் விலை பேசும் அமெரிக்காவில் இப்போது மனிதர்களும் போர்க்கருவிகளாகி விட்டார்கள். இதுவரை ஆயுதங்களை மட்டுமே விற்று வந்த ஆயுத வர்த்தகர்கள் இப்போது மனிதர்களையும் ராணுவப்பணி புரிய ஒப்பந்த அடிப்படையில் அமர்த்துகிரார்கள். ஆயுதங்களின் அவசியத்தை மறக்காத அமெரிக்கா அதன் தேவையை மறந்து விட்டது. தான் விற்கும் ஆயுதங்கள் எங்கே செல்கின்றன, ஆயுத விற்பனை எப்படிப்பட்ட அரசை நிலை நிறுத்துகிறது, ஆயுத விற்பனையின் பய்ன்களை அனுபவிப்பவர்கள் யார், இந்த விற்பனை அமெரிக்க பாதுகாப்பை வலுவாக்கக் கூடியதா என்ற எல்லா கேள்விகளையும் அமெரிக்காவை ஆட்சி செய்பவர்கள் மறந்து விட்டார்கள். அவர்கள் விற்ற ஆயுதங்கள் இன்று அவர்களைக் கொலை செய்யவே பயன்படுகின்றன. இது தெரிந்தும் அமெரிக்க அரசு ராணுவ ஆயுதங்களைத் தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது. தேசத்துக்காகப் போராடும் சாமானியர்கள் தேசத்தின் பெயரால் தங்கள் உயிர்கள் விலை பேசப்படுவதை அறிய மாட்டார்கள்.
அமெரிக்க அரசின் குறுகிய பார்வையையும் கொள்கையற்ற ஆயுத வணிகத்தையும் கடுமையாக விமரிசிக்கும் நூல் மதிப்புரை ஒன்று வாஷிங்டன் போஸ்ட்டில் வந்திருக்கிறது.
[/stextbox]
[stextbox id=”info” caption=”போர்களின் உயிரிழப்பு – ஒரு கணக்குவழக்கு”]
இதுவரை சாதி சமய மொழி இன தேசிய வேற்றுமைகளாலும் இதுபோன்ற இன்னபிற வேற்றுமைகளாலும் எண்ணற்ற போர்கள் நடந்திருக்கின்றன, இவற்றில் எண்ணற்ற உயிரிழப்பும் எண்ணற்ற பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கிறது என்று எண்ணற்ற முறை படித்திருப்போம். ஆனால், எங்கு, எந்த அரசு எவ்வளவ பேரைக் கொன்றிருக்கிறது என்று கணக்கு வழக்கு தயாரித்து வைத்திருக்கிறார் ஒருவர். இவரது கணக்கு எவ்வளவு துல்லியமானது என்பது குறித்து பல்வறு கருத்துகள் இருப்பினும், இவரைப் போதுவகாவே நம்பத்தகுந்தவராகவே கருதுகிறார்கள். அன்மையில் போரும் பண்பாட்டு வளர்ச்சியும் குறித்து புத்தகம் வெளியிட்டுள்ள ஸ்டீவன் பிங்கர், இவர் சேகரித்து வைத்திருக்கும் தகவல்கள் இன்றியமையாதவை என்று சொல்கிறார். விபரீதமான தகவல்களைச் சேர்த்து ஆவணப்படுத்தும் பணி, மனித குலத்துக்குப் பயனுள்ள ஒன்றுதான், ஆனால் தனி மனித அளவில் ஒருத்தர் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது வாசிக்கச் சுவையாக இல்லை. என்றாலும், ஆளும் அதிகார அரசுகளைக் கேள்வி கேட்கக்கூடிய தகவல்களை ஒருவர் தயாரிப்பது நல்ல செய்திதானே?
[/stextbox]
[stextbox id=”info” caption=”மனிதாபிமான ஆயுதங்கள்”]
போர் புரிவது என்று ஆனபின் நல்ல போர் தீய போர் என்று வகைமைப்படுத்துவது எவ்வளவு அற்பத்தனமான செயலோ அவ்வளவுக்கே மனிதாபிமான ஆயுதங்களைப் பயன்படுத்துவதும். எதிரிகளைக் கொலை செய்யாமல் தடுத்து நிறுத்தப் பயன்படும் ஆயுதங்கள் மனிதாபிமான ஆயுதங்களாகக் கற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், இவை போர்க்களத்தில் பயன்படப் போவதில்லை: பொது மக்கள்தான் இவற்றால் கட்டுப்படுத்தப்படப் போகிறார்கள். ஷாக் அடிக்கும் டேஸர் துப்பாக்கிகள், மிளகுத் தூள் நிரப்பப்பட்ட அறுநூறு ரப்பர் குண்டுகளை ஒரே நேரத்தில் உமிழக் கூடிய துப்பாக்கிகள், தண்ணீரில் நீந்துபவர்களை தலைசுற்றி வாந்திஎடுக்க வைக்கும் நோக்கத்தில் செலுத்தப்படும் சோனிக் அலைகள், பறக்கும் விமானத்தைப் பாதி வழியில் மடக்கி விரும்பிய திசையில் செலுத்தக்கூடிய லேசர் துப்பாக்கி பொருத்தப்பட்ட போர் விமானங்கள் என்று விரிந்து கொண்டே செல்கின்றன ராணுவ அதிகாரிகளின் கனவுகள்.
சுட்டி: http://www.wired.com/dangerroom/2012/01/non-lethal-weapons/
[/stextbox]
[stextbox id=”info” caption=”அம்பலமாகும் ஜெர்மானிய இனவெறி”]
அனானிமஸ் குழுவின் படையினர், ஜெர்மன் புது நாஜி இயக்கத்தின் வண்டவாளங்களை அம்பலப்படுத்தும் வேலையில் இறங்கி இருப்பதாகத் தெரிகிறது. ஜெர்மன் சஞ்சிகை ’டெர் ஷ்பீகல்’ (முகம் காட்டும் ஆடி) இது குறித்து வெளியிட்டிருக்கும் செய்தியில் சொல்வதில் இருந்து இந்தக் குழு ஜெர்மனியின் தீவிர வலது/ இனவெறிக் குழுக்களிடையே உள்ள கூட்டணியை அவர்களின் மின் கடிதங்களைக் கைப்பற்றி அவற்றை வெளியிடுவதன் மூலம் ‘அம்பலத்துக்குக்’ கொணரப் போகிறதாம். இது ஜெர்மனியின் அரசியலில் குழப்பங்களை உருவாக்கி ஜெர்மனி மக்களின் பண்பாட்டிலும் சிக்கல்களைக் கொணரும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் நூறாண்டுகளாக அல்லது அதற்கு மேலாக பல நாடுகளிலும் தம் தீவிரக் கிருஸ்தவ இனவெறியைப் பரப்பிக் கொண்டிருந்த ஜெர்மன் கல்வியாளர்கள், மேலும் நாஜி இயக்கத்தினர் அவ்வளவு சீக்கிரம் தம் அற்பத்தனங்களை விட்டு விடுவார்கள் என்று நம்ப முடியுமா என்ன?
http://www.spiegel.de/international/germany/0,1518,806939,00.html
சுட்டி: http://www.spiegel.de/international/germany/0,1518,806939,00.html
[/stextbox]
[stextbox id=”info” caption=”மொழிகள் குறித்த சுவாரசியம்”]
உலக வரலாற்றில் 72 மொழிகள் பேசத் தெரிந்தவர் இருந்திருக்கிறார். ஆனால் அவரது ஜீனியசில் எந்த மர்மமும் இல்லை – நம் மழலைகள் பயன்படுத்தும் பிளாஷ் கார்டுகளைத்தன பயன்படுத்தி இருக்கிறார். ஐம்பது மொழிகளைப் பேசத் தெரிந்த ஒருவர் ஹெல்சின்கிக்கு விமானத்தில் பயன்பப்படுகையில் பின்னிஷ் மொழியைக் கற்றாராம். ஆனால் அவரது மகன், தன் தந்தை கூச்சப்படும் இயல்பு கொண்டவரென்றும், தன் சுபாவத்தை மறைத்துக் கொள்ளவே வெவ்வேறு மொழிகள் கற்றார் என்றும் சொல்கிறார். மனித மனம் எப்படியெல்லாம் வேலை செய்கிறது பாருங்கள். இன்னொருவர், வாசிக்க மட்டுமே பன்மொழிகளைக் கற்றிருக்கிறார்- “தனக்குத் தெரிந்த ஆங்கிலத்திலேயே சுவையாகப் பேச முடியவில்லை என்று இருக்கும்போது மற்ற மொழிகளில் பேசும்போது மட்டும் போரடிக்காமல் இருக்கப் போகிறதா?” என்பது அவரது கேள்வி. அவராவது பரவாயில்லை, பல டஜன் மொழிகள் தெரிந்த ஒருவர், தன் மனைவி குளிர் கோட்டு அணிந்து செல்லச் சொல்லி அறிவுரை செய்ததால் அவருடன் பல மாதங்கள் பேசாமல் இஅருந்தாராம்- அவர் மௌன மொழியை நன்றாகப் பேசுவாரோ என்னவோ.மொழியறிவும் அதன் உளவியல் மற்றும் மரபணுக் கூறுகள் குறித்த ஒரு சுவையான கட்டுரை இங்கே இருக்கிறது.
சுட்டி: http://www.economist.com/node/21542170
[/stextbox]