மகரந்தம்

[stextbox id=”info” caption=”சீனாவின் கால்பந்தாட்டம்”]

உலக வரைப்படத்தில் சீனாவை பார்க்கும் போது ஒரு பெரிய விரிந்த அரங்கு போலத் தோன்றும். இந்த பரந்த அரங்கில் சீனா தன் மக்களையே ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு துரத்திஅடிக்கிறது. இது ஒருவகை சமூக கால்பந்தாட்டம். ஆனால் இங்கு இந்தக் கட்டுரை பேசுவது கால்பந்தாட்ட விளையாட்டு குறித்து. இந்த விளையாட்டுடனான தனது தொடர்பை சீனா 2-ஆம் நூற்றாண்டு(பொது யுகம்) என்று சீனா அறிவிக்கிறது. சீனாவை தொடர்ச்சியாக ஆண்ட சர்வாதிகாரிகளுக்கும் கால்பந்தாட்ட மோகம் பிடித்தாட்டியது. உலகளவில் பல துறைகளிலும் தனது முத்திரை பதித்துவரும் சீனா, விளையாட்டுத் துறையிலும் சமீபகாலங்களில் பல சாதனைகளை புரிகிறது. சமீபத்திய ஒலிம்பிக் போட்டிகளில் சீனா தான் அதிக தங்கப் பதக்கங்களை குவித்தது. விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுப்பது முதல் அவர்களது பயிற்சி போன்ற பல விஷயங்களில் சீனா செயல்படுத்தும் மிகக் கறாரான, கொடூரமான பயிற்சி முறைகள் தான் இதற்கு காரணம். அனைத்து விளையாட்டுப் பிரிவுகளில் இந்த முறை நல்ல பலனை அளித்தாலும் கால்பந்தாட்டத் துறையில் கடந்த பல பத்தாண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை. இதன் முக்கிய காரணமாக சொல்லப்படுவது அத்துறையில் நிலவும் பகாசுர ஊழல். அது மட்டும் தானா? இல்லை என்கிறார் இந்தக் கட்டுரையாசிரியர் : “சீனா கால்பந்தாட்டத்தில் இன்னும் பல விஷயங்களை கற்க வேண்டியிருக்கிறது; ஒரு ஆட்ட முடிவை ஏற்கனவே தீர்மானிப்பது உட்பட”. மேலும் பல விவரங்களுக்கு இக்கட்டுரையைப் படியுங்கள் :

http://www.economist.com/node/21541716
[/stextbox]


[stextbox id=”info” caption=”ஜெர்மனியில் மன்னிக்கப்படும் சூனியக்காரிகள்”]

17-ஆம் நூற்றாண்டின் ஜெர்மனி சமூகத்தில் பெண்கள் பலரும் கொத்துக் கொத்தாக சூனியக்காரிகள் என்று முத்திரை குத்தப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டனர். கத்தோலிக்க மற்றும் புரொட்டெஸ்டண்ட் மத நிறுவனங்கள் இப்பெண்களை சாத்தனுடன் தொடர்புள்ளவர்கள் என்றும், இவர்களால் தான் மழை பொய்த்துபோவதாகவும், அறுவடை பாதிக்கப்படுவதாகவும், வியாதிகள் பரவுவதாகவும் அறிவித்தார்கள். இதை காரணம் காட்டியே பல அரசாங்க ஊழியர்கள் தங்கள் நிர்வாகத் தவறுகளை மறைத்தனர். பல ஆண்டுகள் தொடர்ந்த இந்த கொடூரங்களின் பின்ணணியில் இருந்த உளவியல் காரணங்கள் மார்வின் ஹாரிஸ்(Marvin Harris) போன்ற சமூகவியலாளர்கள் ஆராய்ந்துள்ளனர். தொடங்கிய பிரச்சனைக்கு வருவோம். ஹெகல்ர் என்பவர் தற்போது இந்த கொடூரங்களை ஆராய்ந்த வருகிறார். சூனியக்காரிகள் வேட்டை குறித்து மட்டும் 17 புத்தகங்களை எழுதிவருகிறார். அப்பாவி பெண்கள் பலரும் இந்த ‘வேட்டை’யில் பலியிடப்பட்டிருப்பதை தனது ஆராய்ச்சிகளின் மூலம் தான் அறிந்தக் கொண்டதாக கூறும் இவர், அவர்களை தற்போதைய அரசாங்கம் குற்றமற்றவர்கள் என்று அறிவிக்க வேண்டும் என்று போராடுகிறார். இதனால் என்ன லாபம்? ஹெகலர் சொல்கிறார் : “நாம் அந்த அப்பாவிகளுக்கு கடமைப் பட்டுள்ளோம். இது கடந்தகாலம் குறித்து மட்டுமல்ல. நிகழ்காலத்தில் நம்மால் பாதிக்கப்பட்டவர்கள் மீதும் நாம் காட்டும் கரிசனம்”. மேலும் தகவல்களுக்கு இதைப் படியுங்கள் :

http://www.spiegel.de/international/germany/0,1518,804288,00.html
[/stextbox]

[stextbox id=”info” caption=”இரண்டு புதிய தொழில்நுட்பங்கள்”]

– கணிணிகளின் இயக்கத்திற்கு டிரான்சிஸ்டர்கள் மிக அவசியம். இதன் திறனை பொறுத்துத் தான் கணிணியின் வேகமும். தற்போது விஞ்ஞானிகள் ஒரு புது வித டிரான்சிஸ்டர்களை முன்வைக்கின்றனர். முப்பரிமாண டிரான்சிஸ்டர்கள். இவைகளால் கணிணியின் வேகம் இன்னும் கூடுமாம். மேலதிக தகவல் இங்கே : http://www.gizmag.com/indium-gallium-arsenide-3d-transistor/20825/

– ஸ்மார்ட்போன்களில் தற்போது உலகமே சொக்கிப்போய் கிடக்கிறது. அவற்றின் எளிமை என்ன! அதன் செயல் திறன் என்ன!! அதன் நளினம் தான் என்ன!!! நெகிழ்ந்து, நெக்குருகி இவற்றை சாத்தியப்படுத்திய அந்த நிரலாளரை திறன்வியந்து வாழ்த்தும் முன், இதை அனைத்தையும் சாத்தியப்படுத்தியதில் வன்பொருளாளரின் பங்கையும் நீங்கள் உணர வேண்டும். ஸ்மார்ட்போன்களில் இந்த வன்பொருள் ஆற்றும் பங்கு மிக முக்கியமானது. இதிலும் தொழில்நுட்பம் வெகு வேகமாக நடைபெறுகிறது. இந்தக் கட்டுரையை படியுங்கள் : http://www.gizmag.com/bluespec-code-circuit-system/20827/
[/stextbox]

[stextbox id=”info” caption=”அதிநவீன கேமரா : ஒரு விநாடியில் ஒரு டிரில்லியன் பிரேம்கள்”]

வழக்கம்போல் இந்தக் கண்டுபிடிப்பும் MIT பல்கலைக்கழகத்திலிருந்து. சொல்ல எதுவும் இல்லை. கீழே இருக்கும் ஒளிப்படத்தை பார்த்துவிடுங்கள்.

[/stextbox]

[stextbox id=”info” caption=”நெதர்லாந்து : உருமாறும் தேவாலயங்கள்”]
நெதர்லாந்து நாட்டில் கிறித்துவ தேவாலயங்களுக்கு இது சோதனைக் காலம். ஒரு கணக்கின் படி, ஒரு வாரத்திற்கு இரண்டு தேவாலயங்கள் இழுத்து மூடப்படுகின்றன. இறை விசுவாசிகளின் எண்ணிக்கை வெகு வேகமாக குறைந்தவருவது தான் இதற்கு காரணம். தோராயமாக, வருடத்திற்கு 60,000 பேர் புரெட்டஸ்டென்ட் மதத்தை விட்டு வெளியேறுகிறார்கள். ஆனால் ’இந்தக் கட்டிடங்களை என்ன செய்வது?’ என்ற கேள்வி எழுத்துவங்கிய போது அதற்கான விடையுடன் ஒருவர் தோன்றினார். அவரது யோசனையின் படி இழுத்து மூடப்பட்ட தேவாலயங்கள் தற்போது கிடங்குகளாக, நூலகங்களாகவும் மாறுகின்றன. இதற்கெல்லாம் யோசனை சொல்பவர் ஒருவர், அவர் தான் இப்போது அந்நாட்டில் மிகப் பிரபலம். இது குறித்து ஒரு கட்டுரை இங்கே. நெதர்லாந்து நாட்டின் சமூக மாறுதல்கள் குறித்தும் ஒரு பார்வை இதில் உண்டு.

http://www.spiegel.de/international/zeitgeist/0,1518,805075,00.html
[/stextbox]