’துருவ நட்சத்திரம்’ – குறித்து இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன்

குறிப்பு : சொல்வனத்தின் சமீபத்திய வெளியீடான ‘துருவ நட்சத்திரம்’ புத்தகம் குறித்து மூத்த படைப்பாளிகளின் கருத்துகள் கீழே அளிக்கப்பட்டுள்ளன.

thuruvanatchathiram_final

ஜி.என்.பி பற்றி எழுதிய சூடு தணிவதற்குள், இன்னொரு இசை மேதை பழனி சுப்புடுவைப் பற்றி மிகவும் நளினமான நூல் ஒன்று எழுதியுள்ளார் லலிதா ராம். நம் இனத்துக்கு மறதி அதிகம். அதனால்தான், தமிழிலக்கியத்துக்கு ஒரு உ.வே.சா., ஒரு சி.வை.தாமோதரன் பிள்ளை ஆகியோர் தேவைப்படுகின்றனர். அது போல் இன்று லலிதா ராம் தமிழ் இசை உலக வரலாற்றிற்குக் கிடைத்திருப்பது இசையின் அதிர்ஷ்டம்.

வாழ்க்கை வரலாறு எழுதுவது அவ்வளவு எளிதன்று. நன்றாக ஆய்வு செய்து கிடைத்த தகவல்களை எப்படிச் சுவையாகச் சொல்வதென்பது ஒரு பெரிய சவால். ஏனென்றால், படிக்கின்றவர்கள் அனைவரும் வரலாற்று நாயகரைப் பற்றியும், அவர் சாதனைகளைப் பற்றியும் நன்கு புரிந்து கொள்ளும்படிச் செய்தாக வேண்டும். இவ்வகையில் இந்நூல் லலிதா ராமுக்கு மாபெரும் வெற்றி.

கலைஞர்களுக்கிடையுள்ள மனித உறவு சிக்கல்களைச் சொல்லும் போது, வரலாற்றாசிரியனின் பொறுப்பு கயிற்றின் மீது நடப்பது போல. இம்மியும் ஒரு பாற் கோடாமல், நடுவுநிலைமையில் நின்று, நிகழ்வுகளைப் பதிவு செய்ய வேண்டும். வெற்றிகரமாகச் செய்திருக்கிறார் லலிதாராம். சில கற்பனைப் பாத்திரங்கள் இடையிடையே வருவது வரலாற்றிற்குச் சுவாரஸ்யம் தருகிறது.

ஒரு மகத்தான கலைஞனாக, மனிதனாகப் பழனி சுப்புடு பரிமாணம் கொள்கிறார். லலிதா ராமின் இப்படைப்பில்.

இந்திரா பார்த்தசாரதி

-o00o-

Thank you for a copy of the book. It is extremely readable and very informative.

அசோகமித்திரன்

குறிப்பு : இப்புத்தகத்தை இந்த இணையச் சுட்டியின் மூலம் வாங்கலாம் : உடுமலை.காம்

One Reply to “’துருவ நட்சத்திரம்’ – குறித்து இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன்”

Comments are closed.