சோவியத் என்றொரு கலைந்த கனவு

சோவியத் என்றொரு புவி அமைப்பு இருந்தது. அது உலகெங்கும் பல மக்களின் கனவாகவும் இருந்தது. 20 வருடங்களுக்கு முன் அந்தக் கனவு கலைந்தது. ஒரு சித்தாந்தத்தின் வீழ்ச்சியாக அது கருதப்பட்டது. தனி மனித அளவில் பலருக்கு அது அளித்த ஏமாற்றம் அளப்பெரியது. ஏமாற்றம், அதைத் தொடர்ந்து வெற்றிடம். அந்த வெற்றிடத்தை நிரப்ப அவர்களில் பலர் புதுக் கனவை தேடி அலைந்தனர். இப்போதைக்கு சீனா தான் அவர்களின் தற்போதைய கனவு.

20 வருடங்களுக்கு முன் சோவியத்தில் நிகழ்ந்த அந்நிகழ்வுகள், அதைத் தொடர்ந்து சோவியத் நிலத்தில் இருந்த அதிர்வலைகள், இப்படி ஒரு காலத்தை நம்முன் கொண்டு வரும் புகைப்படத் தொகுப்பு இங்கே.