பெண்களின் சரித்திரம், அன்றாட வாழ்க்கை, போராட்டங்கள் இவற்றை ஒலி மற்றும் காட்சி வடிவங்கள் மேலும் பேச்சுவழிச் சரித்திரப் பதிவுகள் மூலம் ஆவணமாக்கி வரும் ஒரே ஆவணக் காப்பகம் ஸ்பாரோ(SPARROW). 1988-இல் முனைவர். சி.எஸ்.லஷ்மியும்(அம்பை) அவரது நண்பர்களும் இணைந்து நிறுவிய இந்த அமைப்பு, தற்போது பல, மிக வித்தியாசமான முறைகளில் பெண்களின் வாழ்க்கை மற்றும் சரித்திரம் பற்றிய விவரங்களைச் சேகரித்து, அவை எல்லோருக்கும் கிடைக்கும்படி அமைத்து, இயங்கி வருகிறது. பெண்களின் நிறுவனமான இதைப் பற்றியும், அதன் பல நடவடிக்கைகள் பற்றியும் www.sparrowonline.org என்ற அதன் இணைய தளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
ஸ்பாரோவுக்கு இப்போது ஒரு சிறு கூடு இருக்கிறது. ஆனால், தொடர்ந்து தன் வேலையைச் செவ்வனே செய்ய ஸ்பாரோவுக்கு நிதி உதவி தேவைப்படுகிறது. இதன் பொருட்டு, ‘பறக்க ஒரு வானம்’ (A Sky to Fly) என்ற நிதி சேர்க்கும் திட்டம் ஒன்றை ஸ்பாரோ துவங்கி உள்ளது. தற்போது ஸ்பாரோவின் தேவை, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு .25,000 ($500) ஸ்பாரோவின் டாக்டர் நீரா தேசாய் நினைவு நூலகத்துக்கு நன்கொடை தரக்கூடிய 2000 நண்பர்களும் ஆதரவாளர்களும். ஆண்டுக்கு ரூ25,000 ($500) என்பது ஒரு நாளுக்கு
.75 ($2) விடக் குறைவான ஒரு தொகைதான். இது ஸ்பாரோ தன் வேலையைத் தொடர்ந்து செய்ய வெகுவாக உதவும். பெண்களின் சரித்திரம் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்வமும், அதன் அவசியம் பற்றிய கருத்துத் தெளிவும் உள்ள அனைவரும் ஸ்பாரோவுக்கு உதவ முன்வருவார்கள் என்பது எங்கள் நம்பிக்கை.
ஒரு நண்பர் பல நண்பர்களைக் கொண்டு வந்தால் ஸ்பாரோவின் கூட்டைத் தாங்கும் நட்பு மரம் ஒன்று உருவாகிவிடும், நன்கொடைகளுக்கு வரி விலக்கு உண்டு. உதவும் நண்பர்களுக்கு, ஸ்பாரோவின் செய்தி மடல்களும், ஆண்டு அறிக்கைகளும் அனுப்பப்படும். ஸ்பாரோவின் வெளியீடுகள் நன்கொடையாளர்களுக்கு 20% சலுகை விலையில் கிடைக்கும்.
பறக்க ஒரு வானத்தை ஸ்பாரோவுக்குத் தர பலர் முன்வர வேண்டும்.
குறிப்பு : நிதியுதவி செய்ய விரும்புவோர் கீழே இருக்கும் இரு கோப்புகளை தரவிறக்கி தேவையான மேலதிகத் தகவல்களைப் பெறலாம். 25000 ரூபாய்தான் தர வேண்டுமென்றில்லை, அவரவருக்கு முடிந்த தொகையை அனுப்பலாம். சிறு மழைத் துளிகள்தானே பெரு நதியாகின்றன.
1. SPARROW நிறுவனம் குறித்து:
http://solvanam.com/wp-content/uploads/2011/12/SPARROW Appeal.pdf
http://solvanam.com/wp-content/uploads/2011/12/A note on SPARROW -new version.pdf
2. நிதியுதவி புரிய :
http://solvanam.com/wp-content/uploads/2011/12/Bank transfer details India with address.pdf
http://solvanam.com/wp-content/uploads/2011/12/Sky to Fly Payment Form with address.pdf