மனிதர் என்றென்றுமாக வாழ முடியுமா?

மனிதர் என்றென்றுமாக வாழ முடியுமா? அதற்கு என்ன தடைகள்? என்ன செய்து இவற்றில் பலவற்றை நாம் விலக்க முடியும்? துவக்கத்தில் சாவைப் பற்றி நாம் நினைப்பதையே நாம் மாற்ற வேண்டும். மூப்பு என்பதை எப்படி அணுகுகிறோம் என்பதில் இருந்து துவங்க வேண்டும். வெறும் மூப்பு என்பது அத்தனை நல்ல நிலை இல்லை. ஆனால் உற்சாகமான, வலிவு குறையாத, நல்ல உடல் ஊக்கம் உள்ள வாழ்க்கை நடத்த முடிந்தால் மூப்பு என்பது அத்தனை பிரச்சினையாக இராது. ஆப்ரெ த க்ரே என்னும் உடற்கூறு ஆய்வாளர் (அவர் மூப்பு பற்றிய ஆய்வாளர் என்பது பொருத்தமாக இருக்கும்) ஒரு உரையாற்றுகிறார். வட அமெரிக்க இங்கிலீஷ். யு ட்யூப் என்பதால் கீழே CC என்று வலது மூலையில் இருக்கும் இடத்தில் க்ளிக்கினால் அவர் பேசுவது எழுத்தாகவும் திரையில் தெரியும். உரையில் புரியாத சொற்களை எழுத்தில் படித்துப் புரிந்து கொள்ளலாம். அவருடைய பேச்சின் அனைத்துச் சொற்களும் எழுத்தில் கிட்டாது, சாரம் நிச்சயமாகக் கிட்டும்.

யாரிந்த ஆப்ரெ த க்ரே? கூகிளில் கிட்டும். அல்லது இங்கு கொஞ்சம் தகவல் கிட்டும்.

http://singularityhub.com/2011/07/16/exclusive-video-of-qa-with-aubrey-de-grey-on-how-to-live-forever/

அவருடைய உரையின் விடியோ இதோ: