மகரந்தம்

[stextbox id=”info” caption=”கணிணி பெருநிறுவனங்கள் உபயோகிக்கும் மெகா மின்சக்தி”]

இணையத்தின் முதுகெலும்பு என்று, தகவல்களைப் பிரித்தலசி உலகெங்கும் விநியோகிக்கும் சர்வர் என்றழைக்கப்படும் அளிப்பான்களைச் சொல்லலாம். இவை ஏராளமான ஆற்றலைப் பயன்படுத்துகின்றன. கூகுள் நிறுவனம் மட்டுமே நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் அளிப்பான்களைப் பயன்படுத்துகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டு மில்லியன் டாலர்களை மின் கட்டணமாகச் செலுத்தி இருபது மெகாடன் மின்சக்தியைச் செலவு செய்கிறது கூகுள். மின்சக்தியின் கணிசமான பகுதி இந்த அளிப்பான்களைக் குளிர்விப்பதில் பயன்படுகிறது. இந்த செலவை மிச்சப்படுத்தும் நோக்கத்தில் குளிர்பிரதேசங்களில் தங்கள் அளிப்பான்களை கூகுள் மற்றும் பேஸ்புக் போன்றன நிறுவனங்கள் அமைக்கத் தொடங்கியிருக்கின்றன. இவை வெளிப்படுத்தும் உபரி வெப்பத்தை வீடுகளுக்கு விநியோகிக்கும் திட்டமும் உருவாகி வருகிறது.

http://www.nytimes.com/2011/11/27/business/data-furnaces-could-bring-heat-to-homes.html?_r=2
[/stextbox]


[stextbox id=”info” caption=”35,000 வருட சிங்க மனிதன்”]

இந்த ’நரசிம்ஹர்’ சிலை 35,000 வருடங்களுக்கு முந்தையதாம். தொல்பொருளாய்வாளர்கள் இந்தச் சிலையை துண்டுகளிலிருந்து கவனமாக இணைத்து மறுஉருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது மனித சிங்கமாக இருந்தாலும், பெண் பூசாரியின் சிலையாக இருக்குமா என்று யோசிக்கிறார்களாம். மேலும் செய்தி/ படங்களுக்கு இங்கே போய்ப் படிக்கவும்.
http://www.spiegel.de/international/zeitgeist/0,1518,802415,00.html
[/stextbox]

[stextbox id=”info” caption=”V for Vendetta”]

மிகப் பிரபலமான V for Vendetta என்கிற காமிக் புத்தகத் தொகுப்பு பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். 10 புத்தகங்கள் அடங்கிய இந்தத் தொகுப்பு, காமிக் புத்தகங்களின் ஆர்வமிக்க வாசகர்கள் நடுவே உலகெங்கும் பிரபலமானது.  இதை மாட்ரிக்ஸ் படங்கள் எடுத்துப் பெரும் புகழ் பெற்ற வசௌஸ்கி சகோத்ரர்கள் ஒரு திரைப்படமாக ஆக்கினார்கள். திரைப்படமாக ஏகப்பட்ட தொழில் நுட்பங்கள் நிறைந்திருந்தும் இந்தப் படம் ‘மாட்ரிக்ஸ் அளவு வெற்றி அடையவில்லை. இந்தப் படத்தில் மையப் பாத்திரம் ஒரு முகமூடி அணிந்து பெரும் கிளர்ச்சியை முன் நடத்துகிறான்.  அந்த முகமூடிக்கு முன்னுதாரணமாக, ஊக்கம் தந்த நபர் Guy Fawkes என்கிற ஒரு பிரிட்டிஷ் எதிர்ப்பாளன்.  கய் ஃபாக்ஸ் என்னும் அந்த நபர் கதோலிக்க எழுச்சிக்கு என்று பிரிட்டனின் பாராளுமன்றத்தைத் தாக்கத் திட்டமிட்டு வெடிமருந்துக் குவியலோடு காத்திருக்கையில் பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டவன்.

இந்தத் திரைப்படத்தை வாசகர்களில் பலர் பார்த்திருக்கலாம். பிரிட்டனின் எதிர்காலத்தில் நடக்கும் ஒரு கதை. இந்த நாவலின் V என்ற கதா பாத்திரம் அணியும் முகமூடி இன்று மிகவும் பிரபலம் ஆகியிருக்கிறது.  உலகில் பல நாடுகளிலும் பெருநிதி நிறுவனங்களுக்கும் அரசு அமைப்புகளுக்குமிடையே நிலவும் நெருக்க உறவால், அந்நிதி நிறுவனங்கள் விதிமுறைகளுக்கு அடி பணியாமல் சூதாட்ட வணிகத்தில் இறங்கி மக்களைச் சுரண்டி ஓட்டாண்டிகளாக்கி இருக்கின்றன என்பது நமக்குச் செய்தியாகத் தெரியும்.  இப்படி மக்களுக்குப் பல நாடுகளிலும் பெரு நஷ்டமும் வாழ்க்கைத் தரத்தில் பெரும் வீழ்ச்சியும் நேர்ந்துள்ளதை எதிர்த்து பல நாட்டு இளைஞர்கள் நகர மையங்களில் குழுமி அரசுகள் நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தக் கோரிப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இது பல நாடுகளின் வலது சாரிக் கட்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.  ஜனநாயக நாடுகளில் சமீபத்தியப் புத்தெழுச்சியாகவும்,  மேலை நாடுகளின் அரசியலில் மிக முக்கிய நிகழ்வாகவும் கருதப்படும் “OWS ” போராட்டங்கள் (Occupy Wall Street) , “ஜூலியன் அசாஞ்ச்சை விடுவி” போன்ற போராட்டங்கள் இந்த முகமூடியை மேலும் பிரபலப்படுத்தியிருக்கின்றன.  கண்காணிப்பிலும், எதிர் நடவடிக்கை எடுப்பதிலும் மிக்க தொழில் நுட்பங்களோடு இறங்கி இருக்கும் இந்த அரசுகளுக்குத் தம் அடையாளங்கள் தெரியாமல் இருக்க, இப்போராட்டங்களில் இறங்கி தெருக்களில் போராடும் பல இளைஞர்கள் இந்த முகமூடிகளையே அணிகிறார்கள்.  ஆனால், உலகளாவிய அளவில் இந்த முகமூடி ஏன் மக்களை கவர்ந்துள்ளது? இதன் பின்ணணியில் உள்ள உளவியல் காரணம் என்ன? இது குறித்து இந்த நாவலின் ஆசிரியர் மிக விரிவாக இங்கே உரையாடுகிறார்.

http://www.guardian.co.uk/books/2011/nov/27/alan-moore-v-vendetta-mask-protest
[/stextbox]

[stextbox id=”info” caption=”கூகுள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்களின் ரகசிய சர்வர்கள்”]
கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் கையாளும் தரவுகள் அளவில் மிகப்பெரியவை. அவை இந்த தரவுகளை எப்படி கையாளுகின்றன போன்ற தகவல்கள் பொதுவாக வெளியில் வருவதில்லை. ஏதோ ஒரு ரகசிய இடத்தில் இந்த தரவுகளும், அதன் சர்வர்களும் கையாளப்படுகின்றன. ஆனால் முதன் முறையாக இந்தக் கட்டுரை உங்களை அந்த ரகசிய இடத்திற்கு கொஞ்சம் அருகில் அழைத்து செல்கிறது. தவற விடாமல் படியுங்கள்.
>http://www.wired.com/wiredenterprise/2011/12/facebook-data-center/all/1
[/stextbox]

[stextbox id=”info” caption=”ஆப்பிரிக்க நாடுகளில் அமெரிக்காவின் ரகசிய போர் நடவடிக்கைகள்”]

எத்தியோப்பாவை அதன் அண்டை நாடான இஸ்லாமிய அடிப்படைவாத நாடான சோமாலியாவிலிருந்து காப்பாற்ற(?!) முனைகிறது அமெரிக்கா. இது சமயங்களில் ரகசிய போர் நடவடிக்கைகளில் சென்று முடிகிறது. ஆனால் விஷயம் அதோடு முடிந்ததா? நிச்சயம் இல்லை. விஷயத்தின் சகல கோணங்களையும் அறிய இதைப் படியுங்கள்.
http://www.armytimes.com/news/2011/11/army-tense-ties-plagued-africa-ops-112811w/
[/stextbox]