நெரிசல்

வழி மறித்தவனை
ஒலி பெருக்கிக் கடிந்து
கிடைத்த சந்துகளில்
புகுந்து இடைமறிக்கும்

பல்கிப் பெருகும் போக்குவரத்தால்
பந்தயமாய் மருவிய பயணத்தில்
நொந்து வெந்து புழுவாய் ஊர்கையில்
ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறான்

வைகறையில் அதே சாலையை
குறுக்கும் நெடுக்கும் அளந்து
தினசரி விநியோகிக்கும் பையன்
மிதிவண்டி மிதித்துப் பறக்கும்

ஓர் பறவை போல.