அன்புள்ள நண்பர்களுக்கு,
லலிதா ராம் மிருதங்க மேதை பழநி சுப்ரமணிய பிள்ளை குறித்து எழுதியிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற இசை வரலாற்றுப் புத்தகமும், சுகா எழுதிய ‘தாயார் சன்னதி’ நூலின் இரண்டாம் பதிப்பும் டிசம்பர் மாதத்தில் சொல்வனம் வெளியீடுகளாக வெளிவரக்கின்றன என மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
துருவ நட்சத்திரம் புத்தகத்தின் வெளியீட்டு விழா 11.12.2011 அன்று சென்னை ராகசுதா ஹாலில் நடைபெறும். வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து விஜயலட்சுமி சுப்ரமணியனின் கச்சேரியும் நடைபெறும். அனைவரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். (நிகழ்ச்சி அழைப்பிதழ் விரைவில் இத்தளத்தில் பகிர்ந்துகொள்ளப்படும்.)
சுகாவின் ‘தாயார் சன்னதி’ முதல்பதிப்பு முழுமையாக விற்றுத் தீர்ந்ததையடுத்து, ஓவியர் வள்ளிநாயகத்தின் மேலும் சில ஓவியங்களோடு, பழம்பெரும் புகைப்படக்கலைஞரான இசக்கி அவர்களின் அரிய திருநெல்வேலி புகைப்படங்களோடு இரண்டாம் பதிப்பு வெளியாகவிருக்கிறது.
இரண்டு புத்தகங்களின் விலை, கிடைக்குமிடம் ஆகியவற்றைக் குறித்த தகவலை விரைவில் வெளியிடுகிறோம்.
அன்புடன்,
சொல்வனம் ஆசிரியர் குழு