உலக ஜனத்தொகையின் எண்ணிக்கை 7 பில்லியனை தொட்டு, தொடர்ந்து வெற்றிகரமாக முன்னேறி வருகிறது. ‘வருங்காலத்தில் இன்னும் ஜனத்தொகை அதிகமாகும். இவர்கள் அனைவருக்கும் நம்மால் உணவளிக்க முடியுமா?’ போன்ற வேள்விகள் 60-களிலேயே கேட்கப்பட்டு அந்த கேள்விகள் தற்போது அர்த்தமற்று போயுள்ளன. தற்போது நிலவி வரும் வறுமை நிச்சயம் விவசாயத்தின் குறைபாடல்ல. அதிகார அமைப்புகளும், அரசுகளுமே இதற்கு முக்கிய காரணம். ஆனால் இந்தக் கேள்வி மீண்டும் தற்போது எழுந்துள்ளது. இந்த முறை கொஞ்சம் தீவிரமாகவே நாம் யோசிக்க வேண்டும். நம்மை இதுவரை இயற்கை உணவிற்கு பஞ்சமின்றி காத்துள்ளது. ஆனால் சமீபகாலத்தில் வளர்ச்சி என்ற பெயரில் நம் சூழலை நாம் பெருமளவில் மாசுப்படுத்தி விட்டோம். அதனால் இயற்கை தொடர்ந்து தன் செயல்பாட்டை எப்படி தொடரும் என்று நிச்சயித்து சொல்லமுடியாது. உலகெங்கும் நடைபெறும் சூழலியல் அழிவுகளை ஆவணப்படுத்தியுள்ள இந்தப் புகைப்படங்களை பாருங்கள். இந்த முறை நாம் நிச்சயம் தீவிரமாக யோசிக்க வேண்டிய கேள்வி : ‘வருங்காலத்தில் இன்னும் ஜனத்தொகை அதிகமாகும். இவர்கள் அனைவருக்கும் நம்மால் உணவளிக்க முடியுமா?’