வெளியே, வெட்டவெளியில்


வெளியே, வெட்டவெளியில்

முதிர் இலையுதிர்காலத்தின் சிக்கலான மூடு வழி.
வீசியெறியப்பட்ட புட்டிக் கிடக்கிறது, காட்டின் வாசலில்.
உள்ளே செல்.காடு, இப்பருவத்தில் துறக்கப்பட்ட அறைகளாலான மௌன மாளிகை.
ஒரு சில துல்லிய ஓசைகள் மட்டுமே : யாரோ சுள்ளிகளைக் குறட்டால் பொறுக்குவதுபோல;
ஒவ்வொரு அடிமரத்திலுள்ளிருந்தும், கீலொன்று மெதுவாய் கிறீச்சிடுவதுபோல.
உறைபனி சுவாசம் படர்ந்து, சுருங்கி இருக்கின்றன காளான்கள்.
அவை மறைந்தவற்றின் தனிப்பட்ட பாதிப்புகள் போல.
அந்தி ஆகவிருக்கிறது.நீ இப்போது போகவேண்டும்,
மீண்டும் உன் வழித்தடங்களைக் கண்டுகொண்டு: வயலில் கிடக்கும் துருபிடித்தக் கருவிகள்
மற்றும் ஏரிக்கு அந்த பக்கம் இருக்கும் வீடு, செம்பழுப்பாக,
சதுரமாக சரக்குபெட்டி போல திடமானதாக.

-o00o-

அமெரிக்காவிலிருந்து வந்த கடிதம் என்னைக் கிளப்பி, வெளியே துரத்தியது
ஜூன் மாத வெள்ளை இரவொன்றில், காலியான புறநகர் தெருக்களில்
நிரல்போல குளிர்ந்த, நினைவுகள் இன்னும் மண்டாத புத்தம் புதிய கட்டடங்களின் நடுவே.

அக்கடிதம் என் பையில்.என் சமன்குலைவின் சீற்றத்தின் வேக நடை, ஒரு வகை பிரார்த்தனை.
நீ இருக்கும் இடத்தில், நிஜத்தில், நன்மைக்கும் தீமைக்கும் முகங்கள் உண்டு.
இங்கோ, அது வேர்களுக்கும், எண்களுக்கும், ஒளி மாற்றங்களுக்குமிடையிலான போராட்டம்.

சாவிற்கான தூது அனுப்புபவர்கள், பகலை அஞ்சுவதில்லை.
அவர்கள் கண்ணாடி அலுவலகங்களுள் இருந்து ஆள்பவர்கள். வெயிலில் கொழிப்பவர்கள்.
தங்கள் மேசைகளின் மீது சாய்ந்து உன்னை ஏறிட்டு பார்ப்பவர்கள்.

அங்கிருந்து தொலைவில், நான் ஒரு புதிய கட்டிடத்தின் வாசலில் இருக்கிறேன்.
பல ஜன்னல்களும் ஒரு ஜன்னலாக மறைகின்றன.
இரவின் வெளிச்சமும்,மரங்களின் ஊசலாட்டமும் அங்கு அகப்பட்டுவிட்டன:
கோடை இரவை மேல் நோக்கிய, இந்த அசைவற்ற பளிங்கு ஏரியில்.

வன்முறை நிஜமற்றதாக மறைகிறது
சிறிது நேரம்.

-o00o-

சூரியன் சுட்டெரிக்கிறது.கீழாக இறங்கும் விமானம்,
பிரமாண்ட சிலுவை போன்ற நிழல் விடுத்து, நிலத்தின் மேல் விரைகிறது.
ஒருவன் வயலில் எதன்மீதோ குனிகிறான்.
நிழல் அவனை நெருங்குகிறது.
ஒரு நொடிப்பொழுது அவன் சிலுவையின் நடுவிலிருக்கிறான்.

சிலுவையை, குளிர்ந்த தேவாலய வாயில்களில் பார்த்திருக்கிறேன்.
சில நேரங்களில், அது மனக்கொந்தளிப்பின் ஒரு கண நேர
படப்பிடிப்பெனத் தோன்றும்.

______________________________

இதன் ஆங்கில மூலத்தைச் செய்தவர் ராபின் ராபர்ட்ஸன் (Robin Robertson) என்னும் ஸ்காட்லாந்துக் கவிஞர்.  அவரது கவிதையை இங்கு கொடுத்திருக்கிறோம்.  இக்கவிதை அவர் மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் ‘த டிலீடட் வோர்ல்ட்’ (The Deleted World) என்கிற புத்தகத்தில் உள்ளது.

[DDET ராபின் ராபர்ட்ஸனின் ஆங்கில வடிவைப் படிக்க இங்கே அழுத்தவும்]

Out in the Open

Late autumn labyrinth.
A discarded bottle lies at the entrance to the wood.
Walk in. The forest in this season is a silent palace of abandoned rooms.
Only a few, precise sounds: as if someone were lifting twigs with tweezers;
as if, inside each tree-trunk, a hinge was creaking quietly.
Frost has breathed on the mushrooms and they’ve shrivelled up;
they are like the personal effects of the disappeared.
It is almost dusk. You need to leave now,
find your landmarks again: the rusted implements out in the field
and the house on the other side of the lake, red-brown
and square and solid as a stock-cube.
-o00o-          -o00o-                  -o00o-

A letter from America set me off, drove me out
on a white night in June through the empty suburban streets
among built blocks, cool as blueprints, too new to have memories.

The letter in my pocket. My unquiet raging stride a kind of prayer.
Where you are now, evil and good really do have faces.
Here, it’s mostly a struggle between roots, numbers, transitions of light.

Those that run messages for death don’t shy from daylight.
They govern from glass offices. They swell in the sun.
They lean over their desks and look at you askance.

Far away from that, I find myself in front of one of the new buildings.
Many windows merging into one window.
The light of the night sky and the swaying of the trees are caught there:
in this still mirror-lake, up-ended in the summer night.

Violence seems unreal
for a while.
-o00o-          -o00o-                  -o00o-

The sun is scorching. The plane comes in low,
throwing a shadow in the shape of a giant cross, rushing over the ground.
A man crouches over something in the field.
The shadow reaches him.
For a split-second he is in the middle of the cross.

I have seen the cross that hangs from cool church arches.
Sometimes it seems like a snapshot
of frenzy.

-”Out in the Open” from The Deleted World
[/DDET]