மகரந்தம்

[stextbox id=”info” caption=”மக்கள் தொகை பெருக்கம், சூழலியல், பயம், இன்ன பிற”]

உலக மக்கள் தொகை ஒரு ஐம்பதாண்டுகளுக்குள் 9000 அல்லது 10,000 மிலியன் மக்களாகும் என்று மக்கள் தொகைக் கணக்காளர்கள் பல வருடங்களாகச் சொல்லி வருகிறார்கள். (நம் கணக்கில் 1,00,000 லட்சம் மக்கள் என்று அறிக. அதாவது சுமார் 1000 கோடி பேர்.) இன்று இந்தியாவில் இருப்பது கிட்டத் தட்ட 120 கோடி பேர். 1000 கோடி மக்களை உலகம் தாங்குமா என்றால் இப்போதுள்ள மக்கள் தொகை 700 கோடி என்பதை அறியுங்கள். இதுவே எக்கச் சக்கமான பிரச்சினைகளைக் கொண்டு வந்திருக்கிறது. இந்த 1000 கோடி மக்கள் என்பதுமே உலகில் பல நாடுகளிலும் மக்கள் பெருக்கம் நிறைய இடங்களில் மிகக் குறைந்த வேகத்தில் நகர்வது என்பதை நம்பிக்கை தரும் போக்காக எடுத்துக் கொண்டு இன்னும் 40 வருடத்தில் என்ன ஆகும் என்று ஊகித்ததுதான். ஒரு வேளை அப்படி மக்கள் தொகை பெருகுவது வேகம் குறையாமல் அப்படியே இருந்து விட்டால் என்ன ஆகும் என்று திடீரென்று யோசிக்கத் துவங்கி இருக்கிறார்கள் சில கணக்காளர்கள். ஒருவேளை அப்படி ஆனால், இன்றிருக்கும் அதே வேகம் தங்கி விட்டால், 2100க்குள் உலகில் 1600 கோடி பேராகி விடுவோம் என்று பயப்படுகிறார்கள். இப்படி வேகம் குறையாது இருக்கும் நாடுகள் எவை? ஜார்டன், நைஜீரியா, பாகிஸ்தான், ஜாம்பியா, காங்கோ, கென்யா, மடகாஸ்கர், ருவாண்டா, ஜிம்பப்வே என்று ஒரு சுருக்கப் பட்டியல் உள்ளது. இந்தியாவிலும் வடமாநிலங்களில், குறிப்பாக பிமாரு மாநிலங்களில் அதாவது பீஹார், மத்யப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இன்னும் மக்கள் தொகைப் பெருக்க வேகம் அப்படி ஒன்றும் குறையவில்லை. தென் மாநிலங்களான, கேரளா, தமிழ்நாடு போன்றனவற்றில் மக்கள் தொகைப் பெருக்க வேகம் நன்கு குறைந்து யூரோப்பிய நாடுகளைப் போல ஆகி விட்டது.
மக்கள் பெருக்கத்தைக் குறைக்கும் காரணிகள் எவை? திருமணமாகும் வயதை, குறிப்பாகப் பெண்கள் வயதை, உயர்த்துதல், பெண்களுக்கு உயர் கல்வியை மிகப் பரவலாக்குதல், விளை நிலமும், இதர நிலங்களும் கிட்டுவது கடினமாகுதல், நகரங்களுக்கு கிராம மக்கள் நிறைய இடம் பெயர்தல் போன்றன. விவரமாகப் படித்தறிய இங்கே செல்லுங்கள்:

http://www.guardian.co.uk/environment/2011/sep/19/environment-population-forecasts-wrong

[/stextbox]


[stextbox id=”info” caption=”ஒலிம்பிக் ஜோதியேந்தும் ரோபாட்?”]

2012-ல் லண்டனில் நடைபெறப்போகும் ஒலிம்பிக் போட்டியில் அந்த ஜோதியை ஏந்தி ஓடப்போவது ஒரு ரோபாட்டாக இருக்கலாம்! iCub எனப்படும் அந்த ரோபாட்டுக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்று பொறுத்துத் தான் பார்க்க வேண்டும். எங்கிருந்து வந்தது இந்த சிந்தனை? கணிணிகளுக்கு செயற்கையாக அறிவூட்டும் தொழில்நுட்பம் குறித்து முதலில் பேசியவர் ஆலன் ட்யூரிங். 2012-ஆம் ஆண்டு இவர் பிறந்து 100-வருடம் ஆகும். ஆகையால் அவரை கெளரவப்படுத்தும் வண்ணம் இதை செயல்படுத்த எண்ணியிருக்கின்றனர்.

http://www.gizmag.com/icub-robot-olympic-torch-2012/19927/

[/stextbox]


[stextbox id=”info” caption=”நீங்கள் புவியீர்ப்பு விசையை நம்புகிறீர்களா?”]

புவி ஈர்ப்பு விசை பற்றி நமக்குத் தெரிந்தவற்றை நாம் உறுதியாக நம்புகிறோம், இல்லையா? இயற்பியலாளர்கள் இப்படி எல்லாம் எதையும் ஒரேயடியாக நம்புவதில்லை. ஒரு பொருளை, அதுவும் இரும்புக் கம்பி வளைச் சுருள் ஒன்றைக் கீழே போட்டால் அது எப்படி விழும் என்று கேட்டால் நாம் எல்லாம் நேரே கீழே விழும் என்றுதான் நினைப்போம். ஆம், கண்ணுக்கு அப்படித்தான் தெரியும். அது உண்மையா என்றால் அது வேறு விஷயம். படு வேகமாகக் காட்சிகளைப் படமெடுக்கும் ஒரு காமிராவால் இப்படி மேலிருந்து கீழே விடப்பட்ட ஒரு கம்பிச் சுருளைப் படமெடுத்தார்கள், இந்தச் சோதனையில் என்ன ஆயிற்று? விடை மிக ஆச்சரியமான விடை. பாருங்கள். இந்தக் கட்டுரையில் ஒரு விடியோவும் உண்டு அதையும் பாருங்கள், அப்போதுதான் ஆச்சரியம் மேலோங்கும்.

http://www.wired.com/wiredscience/2011/09/modeling-a-falling-slinky/

[/stextbox]


[stextbox id=”info” caption=”நமீபியாவில் விவாதிக்கப்படும் ஜெர்மன் காலனியம்”]

காலனியம் என்றால் ஒரேயடியாக எரிச்சல் படுவோர் உலகெங்கும் உண்டு. ஆனால் சில விசித்திரர்களும் ஆங்காங்கே காணக் கிட்டுகிறார்கள். உலகிற்கே நாகரீகத்தைக் கொண்டு வந்தது காலனியம் என்று நம்புவோர் இவர்கள். ஏதோ முந்தைய காலத்து மனிதருக்கு நாகரீகமே இல்லாதது மாதிரி. உலகத்தில் இரண்டு செமிதிய மதங்கள் இப்படித்தான், தாம் பிறந்த பின்னரே மனிதருக்குக் கடவுள் என்பதே தெரிந்தது என்று உதார் விடும் மதங்கள். இந்த மதங்களின் உந்துதலால் பிறந்தவை இரு விதக் காலனியங்கள். அவற்றில் யூரோப்பியக் காலனியம் உலகில் கொணர்ந்த பேரழிப்பை இன்னும் உலகோ, யூரோப்பியரோ, பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள மக்களோ சரிவர அறியவும் இல்லை, அந்த அழிப்பு சரிவர மதிப்பிடப்படவும் இல்லை. ஒரு காரணம் காலனியத்தின் கொடும் பிடியில் இருந்து தப்பும் நாடுகள் ஒரு சம நிலைக்கு வரவே அரை நூற்றாண்டிலிருந்து ஒரு நூறாண்டு வரை கூட ஆகிறது. வாழ்வுக்கே போராடும் மக்கள் தம் வரலாற்றை ஒழுங்காக எழுதவா முனையப்போகிறார்கள்? சமீபத்தில் ஒவ்வொரு நாடாக ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் ஓரளவு தம் மக்களை யூரோப்பியக் காலனியம் எப்படி அழித்து நாசம் செய்தது என்று பார்க்கத் துவங்கி உள்ளனர். இந்தப் போக்கை ஒட்டி, ஜெர்மன் காலனியம் நமீபியாவில் என்னென்ன செய்தது என்று இன்று பார்க்கத் துவங்கி இருக்கிறார்கள். அதுவும் நமீபியர்களின் உந்துதலால் முன்னகர்கிற இந்த ஆய்வு அங்கு நடந்த ஒரு படுகொலை, இன அழிப்பைச் சுற்றி வருகிறது. இங்கு ஜெர்மன் பத்திரிகை, டெர் ஷ்பீகல் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறது; இதைப் போல வேறென்னவெல்லாம் அங்கு நடந்தது என்று வெளிவர இன்னும் பல பத்தாண்டுகள் ஆகலாம். இப்போதைக்கு ஒரு சம்பவத்தைக் குறித்த ஒரு சிறு அறிக்கை ஒரு ஜெர்மன் சஞ்சிகையில் காணலாம்.

http://www.spiegel.de/international/germany/0,1518,788601,00.html

இது போல இந்தியாவில் பிரிட்டிஷ், டச்சு, ஃப்ரெஞ்சு, போர்ச்சுகீசியக் காலனியம் என்னென்ன அழிப்புகள், படுகொலைகள் செய்தன என்று ஒழுங்காக ஆராய நம் அரசுக்கோ, நம் அறிவாளர்களுக்கோ சிறிதும் நாட்டமில்லாததற்குக் காரணம், நம் ஆளும் கூட்டங்கள் இன்னும் காலனியத்தின் அடிவருடிகள் என்பதாக இருக்குமோ?

[/stextbox]


[stextbox id=”info” caption=”ஆசியாவில் மக்கள் குடியேற்றம் எப்படி நிகழ்ந்தது?”]

மானுடவியலாளர்கள் உலகில் நிறைய பிரச்சினைகளை எழுப்பிய ஒரு அறிவாளர் கூட்டம். தெளிய வைத்ததை விடப் பிரச்சினைகளை மேலும் கூட்டி பலவகை நாசங்களுக்கு வழி வகுத்த ஒரு துறை மானுடவியல். இதற்குத் துறையைக் குறை சொல்ல முடியாது. அந்தத் துறையில் ஆய்வு முறைகளை யார் பயன்படுத்தினார்கள், எப்படி அறிவைப் பிரசாரம் செய்தார்கள், என்ன நோக்கோடு செய்தார்கள் என்பனவற்றை ஆராய்ந்தால்தான் உண்மை புரியும். மேல் சொன்ன யூரோப்பிய காலனிய ஆக்கிரமிப்பாளர்களின் படைகளைப் பின் தொடர்ந்து பல நாடுகளில், குறிப்பாக ஆசியா, ஆப்பிரிக்கா, தென்னமெரிக்காவில் நுழைந்த மானுடவியலாளர்கள் விட்டுச் சென்ற பலவகைக் கருத்தியல் அறிக்கைகள் இன்னமும் பல நாட்டு மக்களிடையே பெரும் பகைமைகளை, வெறுப்பு வாதங்களை வளர்த்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் ஆரிய இனம் என்ற ஒரு வாதத்தை விதைத்துச் சென்றவர்கள் ஜெர்மன்/ பிரிட்டிஷ் காலனியவாதிகள். இதனால் எழுந்த நாச விளைவுகள் ஏராளம். ஆனால் அதே மானுடவியலில் இன்னொரு புறம் மனித இனத்தின் ஆதி மூலத்தை ஆராயும் வேலையில் இறங்கி இருக்கிறது. இதுவும் வெகு காலமாக நடக்கிறது என்றாலும், இதுவும் கிருஸ்தவ யூரோப்பிய மேட்டிமை வாதங்களாலும், இனவெறியின் தாக்கத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றாலும், சமீபத்தில் மரபணு ஆய்வுகள் என்ற ஒரு ஓரளவு அறிவியலாகக் கருதப்படக் கூடிய கருவி ஒன்று பயன்படத் துவங்கி உள்ளது. இதன்படி சமீபத்தில் சில ஆய்வாளர்கள் பல நிலப்பகுதிகளில் உள்ள மனிதக் குழுக்களின் முடிகளை வைத்து மரபணு ஆய்வு செய்திருக்கிறார்கள். இந்த ஆய்வுகளின் முடிவுகளை இந்தச் சுருக்கக் கட்டுரையில் காணலாம்:

http://www.newscientist.com/article/dn20954-humans-colonised-asia-in-two-waves.html

முடியைக் கட்டி மலையை இழு, வந்தால் மலை என்று ஒரு பழமொழி நம் ஊரில் உண்டு. இந்த ஆய்வாளர்கள் அப்படித்தான் முயல்கிறார்கள். மலை கொஞ்சம் ஆட்டம் கொடுப்பதாகத் தெரிகிறதில்லையா? அதுதான் மனித முயற்சியின் அற்புதம். அதில் ஆதிக்க வெறி மட்டும் கலக்காமல் இருந்தால் நாமெல்லாருமே முன்னேறுவோமோ என்னவோ.

[/stextbox]


[stextbox id=”info” caption=”மீண்டும் ரஷ்யா vs. மேற்கு”]

ஆனால் இந்த முறை வேறு ஒரு தளத்தில். ரஷ்ய நாட்டு உளவுப் படை மிகத் தேர்ந்த உளவியல் நுட்பங்களை கொண்டு ரஷ்யாவில் பணிபுரியும் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகளின் நடவடிக்கைகளை முடக்கத் துவங்கியுள்ளது. தொடர்ச்சியான மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படும் இவர்கள், தங்கள் பணிகளை திறம்பட செய்ய முடியாமல் தவிக்கின்றனர். எப்படியெல்லாம் இது செய்யப்படுகிறது? உதாரணத்திற்கு இந்த அதிகாரிகளின் மனைவிகளுக்கு தொடர்ச்சியாக கலவி பொம்மைகளை அனுப்புவது. யார் எங்கிருந்து அனுப்புகிறார் என்ற விவரம் தெரியாமல், இதை எப்படி தவிர்ப்பதென்றும் புரியாமல் இந்த அதிகாரிகள் திண்டாடுகின்றனர். இத்தகைய உளவியல் சிக்கல்களால் பலர் தற்கொலை செய்து கொள்வதுமுண்டு. மேற்கொண்டு அறிய இந்தக் கட்டுரையை படியுங்கள்.

http://www.guardian.co.uk/world/2011/sep/23/russia-targeting-western-diplomats

[/stextbox]