ஜீன் ஷார்ப் எனும் காந்தியவாதி

ஜீன் ஷார்ப் என்ற அமெரிக்கர் உலகெங்கும் இருக்கும் அடக்குமுறை சர்வாதிகார அரசுகளுக்கெதிராக அகிம்சை வழியிலான போராட்டத்தை முன்னிருத்துபவர். ”From Dictatorship to Democracy” என்ற இவரது பிரபல புத்தகம் அடக்குமுறைக்கெதிரான அற ரீதியான அகிம்சை வழி போராட்டங்களை ஊக்குவிப்பதில் உலகெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒன்று. காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இவரது ஆளுமையும் கருத்தும், காந்தியத்தின் நீட்சியாகவே பார்க்கப் படவேண்டும்.