பெண்களின் சரித்திரம், அன்றாட வாழ்க்கை, போராட்டம் இவற்றை ஒலி மற்றும் காட்சி வடிவங்கள் மற்றும் வாய்வழி சரித்திரப் பதிவுகள் மூலம் ஆவணமாக்கி வரும் ஒரே ஆவணக் காப்பகம் ஸ்பாரோ(SPARROW). 1988-இல் முனைவர். சி.எஸ்.லஷ்மி(அம்பை) தன் நண்பர்களுடன் இணைந்து நிறுவப்பட்டு தற்போது பல வித்தியாசமான முறைகளில் பெண்களின் வாழ்க்கை மற்றும் சரித்திரம் பற்றிய விவரங்களை எல்லோருக்கும் கிடைக்கும்படி வேலை செய்து வரும் ஒரு பெண்களின் நிறுவனம். www.sparrowonline.org என்ற அதன் இணைய தளம் மூலம் அதன் பல வேலைகள் பற்றித் தெரிந்துகொள்ளலாம். ஸ்பாரோவுக்கு இப்போது ஒரு சிறு கூடு இருக்கிறது. தொடர்ந்து தன் வேலையைச் செய்ய ஸ்பாரோவுக்கு நிதி உதவி தேவைப்படுகிறது. பறக்க ஒரு வானம்(A Sky to Fly) என்ற நிதி சேர்க்கும் திட்டம் ஒன்றை ஸ்பாரோ துவங்கி உள்ளது. ஸ்பாரோவுக்குத் தேவை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு .25,000 ($500) ஸ்பாரோவின் டாக்டர் நீரா தேசாய் நினைவு நூலகத்துக்கு நன்கொடை தரக்கூடிய 2000 நண்பர்களும் ஆதரவாளர்களும். ஆண்டுக்கு ரூ25,000 ($500) என்பது ஒரு நாளுக்கு
.75 ($2) விடக் குறைவான ஒரு தொகைதான். இது ஸ்பாரோ தன் வேலையைத் தொடர்ந்து செய்ய வெகுவாக உதவும். பெண்கள் சரித்திரம் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள அனைவரும் ஸ்பாரோவுக்கு உதவ முன்வரலாம்.
ஒரு நண்பர் பல நண்பர்களைக் கொண்டு வந்தால் ஸ்பாரோவின் கூட்டைத் தாங்கும் நட்பு மரம் ஒன்று உருவாகிவிடும், நன்கொடைகளுக்கு வரி விலக்கு உண்டு. உதவும் நண்பர்களின் பெயர்கள் ஸ்பாரோவின் செய்தி மடல்களும், ஆண்டு அறிக்கைகளும் அவர்களுக்கு அனுப்பப்படும். ஸ்பாரோவின் வெளியீடுகள் நன்கொடையாளர்களுக்கு 20% சலுகை விலையில் கிடைக்கும்.
பறக்க ஒரு வானத்தை ஸ்பாரோவுக்குத் தர பலர் முன்வர வேண்டும்.
குறிப்பு : நிதியுதவி செய்ய விரும்புவோர் கீழே இருக்கும் இரு கோப்புகளை தரவிறக்கி தேவையான மேலதிக தகவல்களை பெறலாம்.
2. http://solvanam.com/wp-content/uploads/2011/08/Solvanam ad.pdf