மகரந்தம்

[stextbox id=”info” caption=”The Rise of the Planet of the Apes”]

சமீபத்தில் வெளியாகியிருக்கும் “The Rise of the Planet of the Apes” கதை இது தான் : “சிம்பான்சிகள் மீது செய்யப்படும் ஆராய்ச்சியால் அது மனித குலத்திற்கிணையான அறிவை பெறுகிறது. தன் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு அடங்க மறுத்து அது ஒட்டுமொத்த மனித குலத்தையும் அழிக்க முற்படுகிறது”.

”நாம் நம்மைவிட பரிணாம வளர்ச்சி குறைவாக உள்ள ஒரு மிருகத்தை மேம்படுத்துவதனால் அது நமக்கு ஆபத்தை விளைவிக்கும்”, என்ற பயம் மேற்கத்திய கலாச்சாரத்தில் திரும்பத் திரும்ப பார்க்கக் கிடைக்கும் ஒன்று. “Frankenstein Fear” என்று இதைச் சொல்வார்கள். கொஞ்சம் கவனித்தால் கூட போதும், இந்தப் படத்தின் உளவியலை ”Frankenstein Fear” பாதித்திருப்பதை உணரலாம். மேலும், இந்தப் படம் பல பத்து ஆண்டுகளுக்கு முன் இதே தலைப்புடுன் வெளியான பிரபல ஆங்கிலப் படத்தின் மறுஆக்கமே. ஆக, மேற்கத்திய கலாச்சாரத்தில் இந்த பயம் மிக வலுவாக ஊன்றியுள்ளது என்றும் கருத இடமுண்டு.

ஆனால், இத்தகைய ஆராய்ச்சி தற்காலத்தில் உண்மையில் நடைபெறுகிறதா?

ஆம்

இதனால் நமக்கேதும் ஆபத்துண்டா?

உடனடியாக அப்படி ஒன்றும் நடக்காது.

பொதுவாக நமக்கெல்லாம் இத்தகைய கேள்விகளும் அதன் விடையையும் தாண்டி இன்னொரு கேள்வி ஒன்றையும் விஞ்ஞானிகள் எழுப்புகின்றனர். இத்தகைய ஆராய்ச்சிகளால் நாம் ஏதும் அற மீறல்களை நிகழ்த்துகிறோமா? இந்த கேள்விகளையெல்லாம் பேசும் இந்தக் கட்டுரையை படியுங்கள்.

http://www.theatlantic.com/entertainment/archive/2011/08/the-science-of-planet-of-the-apes-could-simians-get-scary-smart/243138/
[/stextbox]


[stextbox id=”info” caption=”பூமிக்கு இரண்டு நிலவுகள்?!”]
பூமிக்கு ஒரு காலத்தில் இரண்டு நிலவுகள் இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். காலப்போக்கில் சிறிய நிலவு பெரிய நிலவுடன் மோதி அதனுள் ஒடுங்கி இருக்கலாம் என்று கருதுகிறார்கள். இப்படி ஒரு சாத்தியம் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். மேலும் நிலவு குறித்த பல ஆராய்ச்சிக்கான சாத்தியங்களை இந்தக் கூற்று ஏற்படுத்துயுள்ளது என்றும் சொல்கின்றனர். எது எப்படியோ, ஒரு நிலவை வைத்துக் கொண்டே நம் கவிஞர்களை கட்டுப்படுத்துவது கடினம். நல்ல வேளை இரண்டாம் நிலவு இப்போது இல்லை.

http://news.nationalgeographic.com/news/2011/08/110803-earth-two-moons-collision-space-science/
[/stextbox]


[stextbox id=”info” caption=”அழிக்க முடியாத குக்கீ(cookie)”]

இது சாப்பிடத் தூண்டும் மொறு மொறு குக்கீ அல்ல. இணையப் பயன்பாட்டாளர்கள் “cookie” குறித்து அறிந்திருக்கலாம். ஒரு தளத்தை முதன் முறை பார்த்துவிட்டு, சில நேரம் கழித்தோ அல்லது அடுத்த நாளோ அதே தளத்திற்கு செல்லும்போது உங்களை வரவேற்கும் வாசகம் ஒளிர்கிறதா? இது தான் குக்கீயின் பணி. ஒவ்வொரு முறை நீங்கள் ஒரு தளத்தை பார்க்கும் போது, அந்தத் தளம் ஒரு சில தகவல்களை உங்கள் கணிணியில் விதைக்கும். அடுத்த முறை அந்த தளத்திற்கு நீங்கள் செல்கையில் இந்த தகவல்களை அது உபயோகித்துக் கொள்ளும். இது பல சமயங்களில் நல்லது தான். ஆனால் இந்த வசதியை தவறான வழிகளில் உபயோகிக்க முயலும். ஆதலால் இணைய உலாவிகள் இந்த வசதியை கட்டுப்படுத்த தேவையான வசதியை உங்களுக்கு அளித்துவருகிறது. எல்லாம் சரிதான்…ஆனால் சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஒரு விஷயத்தை கண்டுபிடித்துள்ளனர். சில தளங்கள் புதிய தொழில்நுட்பம் ஒன்றின் மூலம் இணைய உலாவிகளால் கூட ஒன்றும் செய்யமுடியாத குக்கீக்களை உங்கள் கணிணியில் விதைத்துவிடுகின்றன. இதை தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்த வேண்டி பல குரல்கள் ஒலிக்கத் துவங்கியள்ளன. மேலும் தகவலுக்கு இந்த கட்டுரையைப் படியுங்கள் :

http://www.wired.com/epicenter/2011/07/undeletable-cookie/
[/stextbox]


[stextbox id=”info” caption=”அயன் ராண்ட்”]
தத்துவஞானிகளால் சமூகத்துக்கு விளையும் பயன் என்னவாக இருக்கும்? சமூகத்தின் போக்குகளை கூர்மையாக அவதனித்து அதன் துயரங்களின் மைய காரணியை கண்டுபிடித்து அதற்கான தீர்வையும், விழுமியங்களையும் அளிப்பதே. அவர்களின் தத்துவங்கள் சமூகத்தின் அனைத்துவித மக்களையும் ஒருங்கிணைப்பதாக இல்லாமல், “தனித்துவம்”, “சுயம்” என்ற வகையில் இருந்தால் தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் பெரும் அழிவை கொண்டுவரும். அயன் ராண்ட் குறித்து சில விவாதங்கள் சமீபகாலமாக தமிழ் சூழலில் எழுந்தன. அந்த விவாதத்தை தொடர்ந்து இந்தக் கட்டுரையை காண முடியும்.

http://www.salon.com/life/feature/2011/04/04/my_father_the_objectivist
[/stextbox]


[stextbox id=”info” caption=”ஜெர்மனியும் குழந்தைப் பிறப்பும்”]

எந்த ஒரு சமூகமும் தொடர்ந்து ஜீவிக்க ஒவ்வொரு பெற்றோருக்கும் 2.1 குழந்தைகள் அவசியம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் ஜெர்மனியில் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. ஜெர்மனியில் வறுமை பெருகி வருகிரது. மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது. குறிப்பாக 18 வயதுக்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும், சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று 7% பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தேவையான கேளிக்கை செலவுகளை செய்யமுடியாதென்று கருதுவதாக தெரிவிக்கின்றனர். இதனால் பலரும் குழந்தை பிறப்பை ஒத்திப்போடவோ அல்லது முற்றிலும் தவிர்க்கவோ முனைகின்றனர். இதை தடுக்க எண்ணிய ஜெர்மனிய அரசாங்கம் பல சலுகைகளை அறிவித்தது ஆனாலும் பெற்றோர் மத்தியில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கான காரணங்களை இந்தக் கட்டுரை ஆராய்கிறது.

http://www.spiegel.de/international/germany/0,1518,778351,00.html
[/stextbox]