வாசகர் மறுவினை


அருணகிரி எழுதிய யானைகளுடன் பேசுபவன் நூல் அறிமுகக்கட்டுரையைப் படித்தேன். ஒரு புனைகதையைப் படிக்கும்போது கிடைக்கக்கூடிய மன எழுச்சியை இக்கட்டுரை வழங்கியது. அருணகிரி விவரிக்கும் துண்டுதுண்டான சம்பவங்கள் புத்ததகத்தைப் படிப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டுகிறது. அருணகிரிக்கு என் வாழ்த்துகள். நாஞ்சில் நாடனின் சிலப்பதிகாரத்தைப் பற்றிய கட்டுரை இவ்விதழின் இன்னொரு சிறப்பம்சம்.

அன்புடன்
பாவண்ணன்

-o00o-

அன்புள்ள ஆசிரியருக்கு,

‘ஸ்குரில்’ படித்தேன். என்ன ஒரு அநாயசமான எழுத்து ! யார் இந்த சிவா என்று கேட்க வைத்த எழுத்து.

படிக்க ஆரம்பித்து முடிக்கும் வரை என் முகத்தில் புன்னகை தவழ்ந்து கொண்டே இருந்தாக எனக்குள்ளே ஒரு தோற்றம். வாழ்த்துக்கள்.

ஸிந்துஜா

-o00o-