மகரந்தம்

[stextbox id=”info” caption=”மின்சாரம், மின்சாரம்”]

சூரிய ஒளியிலிருந்து ஆற்றல் பெரும் முறையில் மரபுசார்ந்த முறைகளை விட கொஞ்சம் செலவு கூடுதலாகும். பிற பிரச்சனைகளும் உண்டு. அதில் ஒரு பிரச்சனைக்கு தற்போது தீர்வு கிடைக்கும் அறிகுறிகள் தோன்றயிருக்கின்றன. சூரிய ஒளி ஆற்றலை சேமிக்கும் கருவி ஒன்றை உருவாக்குவதில் விஞ்ஞானிகள் குறிப்பிடத்தகுந்த வெற்றியை அடைந்துள்ளனர். குறைந்த அளவு இழப்புடன் மின்சாரத்தை சேமிக்கமுடிவதும் ஒரு சிறப்பு. ஆராய்ச்சி நிலையில் உள்ள இந்த கருவி புழக்கத்திற்கு வர இன்னும் அதிக காலமாகலாம். இக்கருவி வெகுஜன உபயோகத்திற்கு வரும்பட்சத்தில் மின்சாரத்தை சேமித்துவைத்துக் கொண்டு தேவையான நேரத்தில் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். பல மணிநேர தொடர் மின்வெட்டுக்கள் பற்றி கவலை குறையலாம்.

http://www.gizmag.com/chemical-nanotube-solar-energy-storage/19228/

சிறிய அளவிலான இம்முயற்சியை போல், பெரு அளவிலும் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. மின்சார உற்பத்தி நிலையங்கள் மக்கள் வாழ்விடங்களிலிருந்து மிகத் தொலைவில் உள்ளதால், மின்சாரம் கம்பிகள் மூலம் கடத்தப்படுகின்றன. இந்த முயற்சியில் அதிக மின் இழப்பு நேர்கிறது. இந்த இழப்பை குறைக்க பல ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. பெரும்பாலான ஆராய்ச்சிகள் தோல்வியில் முடிகின்றன. ஆனால் ஒரு ஆராய்ச்சி குறிப்பிடத்தகுந்த வெற்றி பெற்றிருக்கிறது. மேலதிக தகவல் இங்கே :

http://www.gizmag.com/armchair-quantum-wire-breakthrough/19232/
[/stextbox]


[stextbox id=”info” caption=”மனித இனத்தின் புதிய மூதாதை”]
Home Erectus என்றழைக்கப்படும் நம் மூதாதைகள் குறித்த போதுமான தரவுகள் நம்மிடம் உள்ளன. Home Erectus-க்கும் மூதாதையர்களை “Lucy” என்று அழைக்கிறார்கள். இருவருக்குமிடையேயான தொடர்ச்சி குறித்த ஆராய்ச்சிகள் இன்னமும் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. மனித குலத்தின் தோற்றம் முதன் முதலில் உருவானதாக நம்பப்படும் ஆப்பிரிக்காவில் இந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமீபத்தில் மேலே சொன்ன இரு உயிரினங்களுக்கும் இடைப்பட்ட ஒரு உயிரினத்தின் எலும்பு சிதிலங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Malapa என்ற இடத்தில் கிடைத்துள்ள இந்த சிதிலங்கள் உண்மையில்யே ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாக ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்தக் கட்டுரையில் நமக்கு மேலும் பல தகவல்கள் கிடைக்கின்றன.

http://ngm.nationalgeographic.com/2011/08/malapa-fossils/fischman-text
[/stextbox]


[stextbox id=”info” caption=”சூழலை பாதிக்காத நிலக்கரி தொழில்நுட்பம்”]

நிலத்தடியிலிருந்து நிலக்கரியை வெளியே எடுத்து, அதிலிருந்து நமக்குத் தேவையான ஆற்றலை பெறுவது லாபகரமானதாக கருதப்பட்டாலும், அதன் உடன்விளைவுகள் அதிகம். குறிப்பாக இந்த பணியை மேற்கொள்ளும் போது சுற்றுச்சூழலுக்கு நேரும் கேடு அதிகம். சுற்றுச்சூழல் மாசு குறித்த குரல்கள் தற்போது அதிகம் கேட்கத்துவங்கியுள்ள காலகட்டத்தில் இத்தகைய பணியை மேற்கொள்வதில் உள்ள சிக்கலை சந்திக்க உலக நாடுகளின் அரசுகள் தயங்குகின்றன. ஆனால் ஐரோப்பிய நிறுவனம் ஒன்றின் தொழில்நுட்பம் இந்த தடைகளை களைய உதவும் என்று தோன்றுகிறது. நிலக்கரியை அது நிலத்தடியில் இருக்கும் போதே அதிலிருந்து நமக்குத் தேவையான ஆற்றலை பெறமுடியும். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்படையாது. மேலும், சுரங்கத் தொழிலில் ஈடுபடும் பல்வேறு மனித உயிர்களுக்கும் சேதமில்லை. சீனா இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கியுள்ளது. சீனாவில் இந்தத் தொழில்நுட்பம் வெற்றியடையும்பட்சத்தில் உலக நாடுகளும் இதே வழியில் செல்ல முயலும் என்று எதிர்பார்க்கலாம். இது குறித்த மேலதிக தகவல் இங்கே :

http://www.technologyreview.com/energy/37999/?p1=MstRcnt
[/stextbox]


[stextbox id=”info” caption=”ஒரு முட்டாளும் நார்வே கொடூரமும்”]

நார்வேயில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பும் துப்பாக்கி சூடும் பலரது உயிரை குடித்துள்ளது. இந்த நிகழ்த்திய அந்த மூடனின் 1500 பக்கங்களைக் கொண்டு கையேடு ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த கையேட்டின் ஒரு சில பகுதிகள் கீழே இருக்கும் பக்கத்தில் படிக்கக் கிடைக்கின்றன. மத அடிப்படைவாதம் நிரம்பிய, சக மனிதனை நேசிக்கத் தெரியாத ஒரு முட்டாளின் உளறல்கள் என்று இதைப் படிப்பவர்களால் நிச்சயம் சொல்லிவிட முடியும். உயிரிழந்த அந்த அப்பாவி உயிர்களை நினைக்கையில் நெஞ்சம் கனம் கொள்கிறது.

http://blog.foreignpolicy.com/posts/2011/07/23/what_did_the_oslo_killer_want
[/stextbox]