முதிர்ந்து தடித்த
மரத்தின் இடுக்குகளில்
படிந்திருக்கும் பிசின் போல
மறைத்து வைக்கப்படும்
மனங்கள்.
உறைந்த துளியென
இருதயம்,
இருக்கும் இடத்திலேயே
கனத்துக் கொண்டுபோகும்,
கண்ணாடி தங்கமென
ஒளிரும் கீறல்களுடன்.
உள்ளே, என்றோ
சிக்கிய பூச்சியொன்று
எப்பொழுதுமாய்.