அறிவியலும் மதமும்

இந்த இரண்டுக்கும் இடையே நடக்கும் மோதல் பல நூற்றாண்டு பாரம்பரியம் வாய்ந்தது. ஸ்டெம் செல்(stem-cell) ஆராய்ச்சி குறித்து மேற்குலகில் மதவாதிகளிடமிருந்து பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது. கீழே இருக்கும் ஒளிப்படத்தில் மதவாதிகளின் வாதத்தை மறுத்துப் பேசுகிறார் சாம் ஹாரிஸ். இவர் பிரபல எழுத்தாளர். சமூகத்தில் அறிவியலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துபவர். மத அடிப்படைவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்ப்பவர். இங்கு ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கு ஆதரவாக தன்னுடைய வாதங்களை முன்வைக்கிறார்.