[stextbox id=”info” caption=”Logicomix”]
ஒரு வரலாற்று நாவல் காமிக்ஸ் புத்தக வடிவில் ஒரு வாசகனுக்கு கிடைத்தால் எப்படியிருக்கும்? இப்படி ஒரு சிந்தனையே நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. Logicomix எனும் நூல் பெர்டராண்ட் ரஸ்ஸலின் வாழ்க்கை வரலாற்றை ஒரு காமிக்ஸ் வடிவில் அளிக்கிறது. பெரிதும் அறியப்படாத ரஸ்ஸலின் இளமைக் கால வாழ்க்கையிலிருந்து துவங்கும் நாவல், “உண்மை”யை தேடி அலையும் அவரது வாழ்க்கையை அற்புதமாக பதிவு செய்துள்ளது. ரஸ்ஸல் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அவர் வாழ்வின் அச்சம் படர்ந்த தருணங்கள், தன் சமகால அறிஞர்களுடனான அவரது புரிதல்கள் மற்றும் வேறுபாடுகளை தெளிவாக முன்வைக்கிறது. இந்நூல் இணையத்தில் இலவசமாக படிக்கக் கிடைக்கிறது.
இந்நூல் குறித்த மேலதிக தகவல்களை இங்கே பெறலாம் : http://www.logicomix.com/en/
[/stextbox]
[stextbox id=”info” caption=”பாரதப் பொருளாதாரம் : அன்றும் இன்றும்”]
ஒரு நாட்டின் பொருளாதார வரலாறு என்பது பல்வேறு கூறுகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் எழுதப்பட வேண்டும். அதிலும் இந்தியா போன்ற 5000 வருட உயிர்ப்புள்ள வரலாற்றை கொண்ட நாட்டின் பொருளாதாரத்தை ஆராய்வது சுலபமான காரியமல்ல. நில உடைமை, உபரி, சுரண்டல், சந்தை போன்ற சொற்களை வைத்து மட்டும் இந்தியாவின் பொருளாதார வரலாற்றை எழுதிவிட முடியாது. தொடர்ச்சியாக பல சித்தாந்த(அ)மத ரீதியான பொருளாதார படையெடுப்புகளை எதிர்கொண்ட-இன்றும் எதிர்கொண்டு வரும்-இந்திய சமூகம் மேற்கத்திய நாடுகளின் எந்தவித சொல்லாடலிலும் அடங்கி விடாது. இந்த கருத்தை மிக வலுவாக முன்வைக்கிறது இந்த நூல். கடந்த பொற்காலத்தை பற்றிய துதியை மட்டும் முன்வைத்தும், தற்கால நிலை குறித்து நிதர்சனத்தையும் அறியாமலும் இந்த நூல் பேசவில்லை. பொது யுகத்திற்கு முந்தைய இந்தியாவின் பொருளாதார நிலையை விரிவாக முன்வைத்து, அதிலிருந்து தொடங்கி 1750-ஆம் ஆண்டு(பொது யுகம்) வரையிலான அதன் உச்சத்தை மிகத் துல்லியமான புள்ளிவிவரங்களுடன் இந்த நூலாசிரியர் முன்வைக்கிறார். அதற்கு பிறகான சரிவையும், அதற்கான காரணங்களையும் அலசுகிறார். சுதந்திரத்திற்கு பிறகான இந்தியா, அதன் பொருளாதார போக்குகளை விரிவாக அலசுகிறார். இந்தியாவிற்கான வருங்கால திசை குறித்த சித்திரமும் நூலில் உண்டு.
மேற்கத்திய நாடுகளின் பொருளாதார அளவைகள் இந்திய சூழலுக்கு எந்தளவிற்கு அந்நியமானவை என்பது குறித்தும், ஆசிய(குறிப்பாக இந்திய) சமூக சூழலுக்கும் மேற்கத்திய சமூக சூழலுக்கும், அதன் விழுமியங்களுக்கும், அதில் நிலவும் நுண்ணிய வேறுபாடுகளையும் தெளிவாக குறிப்பிடும் ஆசிரியர், இந்தியாவிற்கான பொருளாதார அளவைகளை அதன் சூழலிடமிருந்தே பெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். இந்தியாவின் பொருளாதார வரலாறு முறையாக எழுதப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் இந்த நூல், அந்த முயற்சியில் நல்ல துவக்கமாகவும் அமைகிறது.
இந்தப் புத்தகம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு : https://www.nhm.in/shop/978-81-8493-213-3.html
[/stextbox]