ஆயிரம் தெய்வங்கள் – 9

பாபிலோனியா – மர்துக் – கில்காமேஷ்

gilgamesh1பண்டைய உலக வரலாற்றில் பாபிலோனியாவின் சிறப்பு மாமன்னர் ஹமுராபி வரைந்த அரசியலமைப்புச் சட்டங்கள் களிமண் பலகையில் எழுதப்பட்டிருந்தன. சட்டங்கள் வரைந்த முதல் பேரரசரான இவர் சுமரை வென்று மெசப்பட்டோமியாவுக்கு வெளியிலும் பல நகரங்களை வென்ற போர் வீரர். சுமேரிய புராணக்கதைகள் பின்னர் பாபிலோனியர்களால் ஆட்கொள்ளப்பட்டது. கதைக்கரு ஒன்றுதான். கதாபாத்திரங்கள் மாறின.

பாபிலோனிய புராணங்களுக்கு எனுமா எலிஷ் என்று பெயர். கி.மு.9-ஆம் நூற்றாண்டில் தொடங்கி கி.மு.2-ஆம் நூற்றாண்டு வரை களிமண் பலகைகளில் ஏழு படிகள் எடுக்கப்பட்டன. எனுமா எலிஷ் வாயிலாக இரண்டு தெய்வீக நாயகர்களாகிய மர்துக், கில்காமேஷ், உலகம் படைக்கப்பட்ட கதை, கிருக சஞ்சாரம் அதாவது ஜோதிஷ மூலவடிவம் எல்லாம் சுவாரசியமானவை. எனுமா எலிஷ புராணத்தின் மூலம் முடியரசு உருவான காலத்திலிருந்து பேரரசன் ஹம்முராபி வரை அரண்மனை நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டும் இலக்கியம் தொல்லியல் ஆதாரங்களை உறுதிப்படுத்துவதாகவும் உள்ளது.

உலகம் பிறந்தது

உலகம் தோன்றும் முன்பு எது பூமி எது வானம் என்ற வித்தியாசமே இல்லை என்று கூறும் பாபிலோனியப் புராணம் நீரிலிருந்து முதலில் தெய்வங்கள் பிறந்தன என்கிறது. நன்னீரில் தோன்றியது அப்சு. சம்ஸ்கிருதத்தில் அப்பு என்றால் நீர். தைய-மத் கடல் தெய்வம். உவர்நீரில் தோன்றியது. தையாமத்துவம் அப்சுவும் கூடியதால் லஹ்முவும் லஹாமுவும் முதல் தெய்வ வாரிசுகளாயினர். இவர்கள் மூலம் என்ஷரும் கிஷரும் வந்தனர். அனு, இயா, தம்கினா படைக்கப்பட்டனர். என்ஷர் வானத்திற்கு மேலே உள்ள பொருள்களுக்கும் உரிமை பெற்றன. ஆனால் பிரபஞ்சம் விளங்காத புதிர்களாகவே இருந்தது. எனினும் இப்புதிர்களுக்கு விடையாக விண்ணுக்கு அனு தெய்வமானார். அனுவின் மைந்தர்களான என்கியும் இயாவும் மண்ணையும், மண்ணின் கீழுள்ள பாதாளத்தையும் ஆண்டனர். ஐந்தாவது களிமண் பலகை எழுதப்பட்ட பின்னரே பிரபஞ்ச இயக்கம். பகல் – இரவு, கிருக சுழற்சி ஏற்பட்டது. இதற்காகவே மர்துக் அவதாரம் எடுத்தார். அதாவது ஒரு புதிய கிருஷ்டி.

புதிய தெய்வங்களான அனுவும் அனுவின் வாரிசுகளும் பிரபஞ்சத்தை இயக்க முயற்சித்தபோது ஆதி தெய்வங்களை அப்சுவும் ஒரு தயாமத்தும் எதிர்த்தன. மண்ணையும் விண்ணையும் படைத்துவிட்டு ஆழ்கடலில் அமைதியாக வாழ்ந்த ஆதிதெய்வங்களான அப்சு-தையாமத்தை எதிர்த்து புதிய தெய்வங்கள் உலகைச் சரிசெய்வதற்காக சமையைக் கூட்டி விவாதித்தன. கடலின் ஆழத்திற்கே கேட்கும்படி தையாமத் வாரிசகளின் கூச்சல்-இரைச்சல் தாங்க முடியாமல் குட்டி தெய்வங்களைக் கொன்றுவிட முடிவு செய்தன. தெய்வ யுத்தம் தொடங்கியது. சர்வ வல்லமையுள்ள மர்துக்கை இயா உருவாக்குவதற்கு முன்பே மாயா ஜாலத்தில் கைதேர்ந்த இயா அசுரர் படைத்தலைவன் மம்முவைச் சிறைப்பிடித்துக் கொன்றான். அப்சுவின் அரணுக்குள் நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த அம்சுவை விலங்கிட்டுப் பின்னர் கொன்றான். தம்சினா என்ற பெண் தெய்வத்துடன் அப்சுவின் அரணில் ஒன்று கூடி மர்துக் பிறக்க வழிசெய்யப்பட்டது. மர்துக்கின் அவதாரத் தைத் தொடர்ந்து வானத்தின் தெய்வமான அனுவாயுவை முடுக்கிவிட்டு ஆழ்கடலில் அலைகளை எழுப்பினான். கடல் மாதாவான தையாமத் தான் முதலில் படைத்த கிங்குவை மணந்து அவனையே தெய்வயுத்தத்தின் எதிரணிக்குப் படைத்தலைவனாக நியமித்தது. அசுர பலத்துடன் ஆர்ப்பரித்த தையாமத்தையும் கிங்குவையும் கொல்ல அனவையும் இயாவையும் தெய்வங்கள் வேண்டின. தையாமத்தை மர்துக்கைத் தவிர வேறுயாராலும் வெல்ல முடியாது என்று அனு-இயா கூறவே, மர்துக் கோரியபடி தெய்வங்கள் மர்துக்கிற்கு முழு அதிகாரம் வழங்கியது.

தையாமத்தை எதிர்த்து மர்துக் போரிடும்போது அனு புயலை உருவாக்கினாள். அப்புயலை மர்துக் தையாமத்தின் மீது ஏவினார். தையாமத்தின் திறந்த வாய்க்குள் வாயுவேகம் நுழைந்து திறந்த வாயை மூடமுடியாமல் ஆக்கியது. மர்துக் சூரியனின் அம்சம் என்பதால் சூரிய சக்திருத்துவிட்ட சூரியபாணம் அவள் உடலைக் கிழித்து ஒரு சூரசம்ஹாரமே அங்கு நிகழ்ந்தது. கிங்குவைக் கயிற்றால் பிணைத்தார்கள். கிங்குவின் வீரர்கள் பிணைக்கைதிகளாயினர். பின்னர் தையாமத்தின் அசர தெய்வங்கள் நரகத்தின் காவலர்களாக நியமனமாயினர். கிருகங்களை முறைப்பஐ இயக்கம் பணிக்கு முட்டுக்கட்டை போட்ட முதிய தெய்வங்களின் சம்ஹாரம் முடிந்ததும் பிரபஞ்சக் குழப்பம் நீங்கி கிரஹச்சுழற்சி ஏற்பட்டது.

சோடியாக்கா? சோதிடமா?

ஐந்தாவது களிமண் பலகை அருமையான சோதிடப் பொக்கிஷமாகும். கிருஹச்சுழற்சி பற்றியும் இரவு பகல் பற்றியும் விளக்குவது சோடியாக்.ஆங்கிலத்தில் என்ற சொல் செமிட்டிக். சோடியாக் சோதிடம் ஆனதும் மூலக்கருத்து பாபிலோனிய வழங்கல் ஆகும். அதைவிட தையாமத்தின் வதத்துடன் உள்ள தொடர்பும் சுவராசியானது. உலக இயக்கத்திற்கு அடிப்படையான கிருஹசஞ்சாரத்திற்குத் தையாமத்தின் உயிர்த்தியாகம் செய்ய வேண்டியிருந்தது. தையாமத் என்பது பிரபஞ்சம். தையாமத்தை வதம் செய்த மர்துக் தையாமத்தின் உடற்கூறுகளால் கிருகங்களைத் தோற்றுவித்தார். தையாமத்தின் உடலை இருகூறாக்கி அதில் ஒன்றைத் தூக்கி உயரப்பிடித்து விண்ணாக்கினார். விண்ணின் பல கூறுகள் கிருகங்களாகி கிருகச்சுழற்சி ஏற்பட்டது. தையாமத்தின் மீதிப்பாதி உடல் மண்ணானது. அதாவது பூமி. தையாமத்தின் தலையிலிருந்து மனிதர்கள் தோன்றினர். அவள் முகத்தில் இருந்த இரண்டு கண்களிலிருந்து பெருகி ஒடிய கண்ணீர் யூஃப்ரட்டீஸ், டைக்கீஸ் நதிகளாயிற்று. அவள் மார்பகங்கள் குளுமையான குன்றுகளாயின. மலைகள் உருவாயின. விண்ணிலிருந்து தையாமத்தின் சுருள்முடி அலை அலையாக வாலாகத் தொங்கி மண்ணைத் தொட்டது. அதுவே சொர்க்க வாசலுக்குச் செல்லும் வழியானது. தையாமத்தின் போராடிய அசுரர்கள் சிலையாயினர்.

மனிதர்களையும் படைக்கும் உரிமை மர்துக்கிடம் இல்லை. மர்துக்கின் பணி தெய்வங்களின் கட்டளைகளை நிறைவேற்றுவதுடன். படைக்கும் தொழிலை அனு, என்லில், என்சி (இயா) செய்தன. மனிதனைப் படைக்க தெய்வ ரத்தம் வேண்டுமென்று இயா கூறவே இப்பணிக்கு ஒரு தெய்வம் பலியாக வேண்டும். தையாமத்தின் புதல்வனும் படைத்தளபதியுமான கிங்கு பலியானான். கிங்கு வெட்டப்பட்டான். கிங்குவின் உடலிலிருந்து வெளிப்பட்ட ரத்தத்தை இயா ஒரு கலசத்தில் பிடித்தார். இயாவின் தந்திர மந்திர வித்தையினால் அக்கலசத்தில் இருந்த ரத்தத்திலிருந்து மனிதர்கள் படைக்கப்பட்டனர். மனிதர்கள் படைக்கப்பட்டதும் எந்த தெய்வங்கள் பூமியில் இருக்க வேண்டும். எந்த தெய்வங்கள் விண்ணில் இருக்க வேண்டும் என்பதை மர்துக் முடிவு செய்தார். மர்துக்கின் முடிவைப் பாராட்டி நன்றிகடனாக தெய்வங்களே ஈசாக்கிலா என்ற ஆலயத்தைக் கட்டின. எனமா எலிஷ் எழுதப்பட்ட ஏழாவது களிமண் பலகையில் மர்துக்கின் பல பட்டப் பெயர்கள் ஐம்பதுக்கும் மேலாக எழுதப்பட்டுள்ளன.

சூரியனின் அம்சமான மர்துக் பனியால் உறைந்திருந்த கடல் மீது தனது வெம்மைக் கிரணங்களைப் பதித்து நீரை விடுவித்தார். பனி உருகி நீராகிறது. இப்பனி இறப்பின் சக்தி. அதை விரட்டியடித்து தாவரங்களுக்கும் மனித வாழ்வுக்கும் உயிரூட்டுகிறார். இப்படிக் குளிர்காலத்தை விரட்டி வசந்தத்தை மர்துக் உருவாக்குகிறார்.

கில் காமேஷ் – புராதன முதல் நாவல்

asiriyaகில்காமேஷ் என்ற புராதன செமிட்டிக் இலக்கியம் 12 களிமண் பலகைகளில் அக்கேடிய மொழியில் எழுதப்பட்டுள்ளது. ஆசிரிய மன்னர் அஷ்டர் பனிப்பால் (கி.மு. 668-627) அரண்மனைப் பொக்கிஷமாக இது கண்டுபிடிக்கப்பட்டது. இதை ஒரு புராதன முதல் நாவல் என்று பழைமை ஆங்கில இலக்கியவாதிகள் மதிப்பிட்டுள்ளனர்.

இந்தக் காவியத்தின் பல இடைவெளிகள் அனடோலியா மற்றும் இதர மெசப்பட்டோமிய கியூனி ஃபார்ம் கல்வெட்டுக்கள் மூலம் தொடர்பு செய்து நிரப்பட்டது. இந்த விவரங்களின்படி கில்காமேஷ் கி.மு. 2500 காலகட்டத்தில் உருக் நகர மன்னராக வாழ்ந்திருக்கலாம் எனன்று யூகிக்கப்படுகிறது. இதர சுமேரிய புராணங்களில் யுகப்பிரளயத்திற்குப் பின் ஆட்சி செய்த மன்னர்கள் வரிசையில் கில்காமேஷ் இடம் பெற்றுள்ளார். கியூனி ஃபார்ம் நைகவே பதிப்பின்பஐ கில்காமேஷ் பாதி தெய்வம் பாதி மனதிர் கதையை இப்படித் தொடங்கலாம்.

என்கிரு என்ற விலங்கு மனிதன் – எனுஸ் உருவாக்கிய மாவீரன். உருக் நகரத்திற்கு வருகிறான். கில்காமேண் நிலம், வானம், மண், காற்று பற்றிய பஞ்சபூத அறிவு நிரம்பப்பெற்ற பலசாலி. இருவருக்கும் போட்டி நடக்கிறது. என்கிடு தில்முனில் வாழுந்தெய்வமான எனுஸ் படைத்த முரட்டு அரக்கன். மூர்க்கமான போர் நிகழ்கிறது. கில்காமேஷ் என் கிருவை வென்றான். ஆனால் அவனைக் கொல்லாமல் அவனது நட்பைப் பெறுகிறான்.

என்கிருவும் கில்காமேஷீம் உயிர் நண்பர்களாயினர். வனப்பிரதேசங்களில் தெய்வங்களால் நியமிக்கப்பட்ட ஹவாஸ் அரக்கனை வெல்ல தில்காமேஷ் என்கிடுவின் உதவியை நாடுகிறார். ஹிவானச வென்றபின் மெசப்பட்டோமியாவின் பல நகரங்களை வென்று புகழ்பெற்று கில்காமேஷ் உருக் திரும்புகிறார். கில்காமேஷ் வீரத்தையும் மேனியழகையும் கண்டு இஷ்டார் தேவதை காமமுற்றார். ஆனால் கில்காமேஷ் இஷ்டாரின் காதலை ஏற்கவில்லை. இதில் என் கிடு பலியாகிறான். இஷ்டார் தன்னுடைய தெய்வீகக்களையை ஏவி கில்காமேஷைக் கொல்ல முயற்சிக்கிறான். கில்காமேஷை உருவாக்கிய இயா அனு தெய்வங்கள் என்கிருவுக்கு விசித்திரமான உத்தரவைப் பிறப்பித்தன.

கில்காமேஷைக் காப்பாற்ற இஷ்டார் காளையுடன் போரிட்டு அதைக்கொன்று தானும் மடியவேண்டும் என்பது அந்த உத்தரவு. தன்னைக் காப்பாற்றத் தானே பலியான ஆருயிர் நண்பன் என்கிரு மறைவுக்குப் பின் வாழ்வில் விரக்தியுள்ள கில்காமேஷ் சாகாவரம் பெற ஆபத்துகள் நிறைந்த பயணத்தை மேற்கொண்டான். பாபிலோனிய யுகப் பிரளயத்திற்குப் பின் எஞ்சிய ஒரே மனிதன் உத்னபிஷ்டிம், இந்த உக்னவிஷ்டிமைத் தேடி அலைந்த தில்காமேஷ் இங்க தேடி அங்கு தேடி கண்டுபிடித்தான். உத்ன பிஷ்டிம் அவனுக்கு யுகப்பிரளயம் பற்றி விவரித்தான். மற்றொரு புராண அடிப்படையில் உத்னபுஷ்டிமின் வாரிசாகவும் கில்காமேஷ் கருதப்படுகிறான். முதுமையே எட்டிப் பார்க்காமல் ஒவ்வொன்றும் இளமையுடனும் இறக்காமலும் வாழக்கூடிய கற்பமூலிகை உள்ள இடத்தைக் குறிப்பிடுகிறார். கில்காமேஷ் அந்த இடத்திற்குச் சென்று அந்தக் காயகற்ப மூலிகையைப் பறித்துக்கொண்டு திரும்பியபோது ஒரு கொடியபாம்பு கில்காமேஷிடமிருந்து ஏமாற்றிப் பறித்துக்கொண்டு பாதாள லோகத்திற்குச் சென்றுவிட்டது. மிகுந்த ஏமாற்றத்துடன் உருக் நகருக்குத் திரும்பிய கில்காமேஷை சமாதானம் செய்த இஷ்டார் கில்காமேஷீக்கு ஒதுரு மேளத்தையும், மேளம் அடிக்குக் குச்சியையும் வழங்கியது. ஆவி வடிவில் என் கிடு வந்து தானே பாதாள உலகம் சென்று காயகற்ப மூலிகையை அப்பாம்பிடமிருந்து திரும்பிப் பெற்று வழங்குவதாகக் கூறியது. இத்துடன் கில்காமேஷ் கதை நிறைவு பெறுகிறது.

இஷ்டார் தேவதை

சுமேரியாவில் இனானா அக்காட்டில் பாபிலோனியாவில் இஷ்டார், பாலஸ்தீனம், அதாவது புராதன மேற்கு செமிட்டிப் பிராந்தியத்தில் அஸ்தார்த்தே, ரிக்வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ள உஷா எல்லாம் ஒன்றே. ரிக்வேதத்தில் இந்திரனால் தோற்கடிக்கப்பட்ட உஷானால் எவ்வாறு கொல்லப்படவில்லையோ அவ்வாறே இஷ்டாஸி கில்காமேஷ் கொல்லவில்லை. வீரம் நிறைந்த பாபிலோனியப் பேரரசன் ஹம்முராபி (கி.மு. 1792-1750) இஷ்டாரை போர்க்கடவுள். ஒரு சிலிண்டர் முத்திரையில் போர்க் கோலத்தில் காட்சி தரும் இஷ்டார் ஒரு சிங்கத்தைக் கட்டி இழுத்து அதைத் தன் வலது காலால் மிதித்தபடி நிற்கும் காட்சி உள்ளது. அநேகமாக இந்த இஷ்டார் இந்திய மரபில் காளியாகவும் துர்க்கையாகவும் இங்க குடியேறியதுவோ. இத்துடன் பாபிலோனிய புராண தெய்வங்களை நிறுத்திவிட்டு இனி வரும் தொடரில் மெசப்பட்டோமியாவுக்கு உட்பட்ட ஹிட்டைட்டியர், ஹீர்ரைட்டியர் தெய்வக்கதைகளை வர்ணிப்போம்.

(தொடரும்)