ஸ்பானிய அரசு அலுவலகங்களை, அதன் அலுவலகர்களை மெல்லிய புன்னகையுடன் சாட்டையால் விளாசும் ஒரு குறும்படம். மொழி மற்றும் மனிதர்களை தவிர்த்துவிட்டு பார்த்தால் இந்தியச் சூழலுக்கு எந்த உறுத்தலுமின்றி இந்தப் படம் பொருந்தும். சீனாவில் இடப்பெயர்வு குறித்து ஜெயந்தி சங்கரின் கட்டுரைத்தொடரைப் படித்துப் பார்த்தால், இந்தக் குறும்படம் சீனாவிற்கும் பொருந்துவது புரியும்.