20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 10

03. ரொமான்டிஸிசம் (Romanticism)-1790 /1850

காதல், வீரசாகசம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ரொமான்டிக் (romantic) எனப்படும் சொல்லுக்கும், நாம் பார்க்கப்போகும் ரொமான்டிக் கலைப் பாணிக்கும் (Romantic Art) -படைப்பின் கருப்பொருள் காதல், வீரம் என்பதாக இருப்பினும் – எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நினைவில் இருத்திக்கொண்டு மேலே போவோம்.

18/19 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் மேலைநாடுகளின் வாழ்க்கை முறையில், அவை சார்ந்த நம்பிக்கைகளில் ஒரு புதிய சிந்தனையை உட்புகுத்தியது ரொமான்டிஸிசம் (Romanticism) என்னும் கலை அணுகுதல். மதம் சார்ந்த, சமூக ஒழுக்கம் முன் நிறுத்தியிருந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள், அவற்றுக்கான அளவுகோல் மதிப்பீடுகள் ஆகியவற்றிற்கு எதிரான சிந்தனையை ரொமான்டிஸிசம் பரிந்துரைத்தது. இதன்வழியில் தனிமனித உணர்வின் சிந்தனை வெளிப்பாடு என்பது உயர்வானதாகப் போற்றப்பட்டது. புலனுணர்வைப் பகுத்தறியும் இடத்திலும், மன உணர்வை ஒழுங்கான சிந்தனையின் இடத்திலும் மாற்றியது. சமூக ஒழுக்கம் என்பது புதிய அளவுகோலால் மாற்றம் கொண்டது. கற்பனை என்பது மனிதனின் அனைத்து ஆற்றல்களினும் உயர்ந்ததாகக் கருதப்பட்டது. அது போலவே இயற்கையும் படைப்புகளில் பெரும்பங்கு வகித்தது. மன உணர்வுகளும், இதிகாசங்களும், குறியீட்டமர்வும் படைப்பின் கருப்பொருளாக கையாளப்பட்டன. பல நிலப்பகுதிக் கலைத் தாக்கங்களையும், அப்போது நிலவிய அரசியல் குழப்பத்தையும் எதிர்த்து இச்சிந்தனை செயற்பட்டது.

ரொமான்டிக் படைப்பாளிகள் தம்மைச் சுற்றியிருந்த சமூக அமைப்பிற்கு எதிராகவே செயற்பட்டனர். அரசியலும், சமூகமும் அவர்களுக்கு ஏற்புடையதாக இருந்தபோதிலும் மக்களிடமிருந்து மெதுவாக விலகத் தொடங்கினர். படைப்புகளில் கற்பனை கூடிய, அறிவுக்குப் பொருத்தமற்ற, இயற்கை சார்ந்த கருப்பொருளைக் கையாண்டனர். இச்சிந்தனையும், செயற்பாடும் இலக்கியத்தில் தொடங்கி இசை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை என்று எங்கும் பரவி ஆதிக்கம் செலுத்தியது. கிழக்கில் ருஷ்யாவிலும், மேற்கில் அமெரிக்காவிலும் அதன் அதிர்வும் தாக்கமும் பரவின.

04. பாம்பியரின் கலை
L`art Pompier (Fireman Art)

இந்தப் ஃபிரெஞ்ச் மொழிச்சொல்லின் பொருள் ஆங்கிலத்தில் ‘ஃபயர்மான் ஆர்ட்’ (Fireman Art) எனப்படும். ஆனால், அப்போது – அதாவது 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் – அந்தச் சொல்லுக்கு எந்தவித முக்கியத்துவமும் இருக்கவில்லை. அதிகாரம் ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொண்ட (Academic) உருவகம் சார்ந்த நீதி சொல்லும் அல்லது, வரலாறு சார்ந்த கருப்பொருளைக் கொண்ட படைப்புகளைப் பாம்பியரின் கலை (L`art Pompier) என்று அழைத்தனர் கலை வல்லுனர்கள். குதிரைமுடி தொங்கும் கிரேக்கப் போர் வீரனின் தலைக்கவசம் போல பிரான்ஸ் நாட்டின் தீ அணைப்பவரது தொப்பி வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த ஓவியங்களில் காணப்பட்ட தலைக் கவசங்களுடன் அவை ஒப்பிடப்பட்டு பாம்பியரின் கலை என்று குறிப்பிடப்பட்டன.

679px-william-adolphe_bouguereau_1825-1905_-_the_remorse_of_orestes_1862

அவற்றை (அப்பாணியை) விரும்பியவர் பாம்பியரின் கலை என்னும் பெயரை கொண்டு அதைக் குறிப்பிடுவதைத் தவிர்த்தனர். அது அப்பாணிக்குப் பெருமை சேர்க்கவில்லை என்னும் எண்ணம்தான் அதற்குக் காரணம். பாரிஸ் நகரில் அப்போது இம்ப்ரஷனிச, தத்ரூப பாணி ஓவியங்களைக் காட்சிப்படுத்திய ‘ஓர்சேயின் மியூஸியம்’ (Muse`e d`Orsay) என்னும் காட்சிக்கூடம் இவற்றையும் அவற்றுக்கு இணையாகக் காட்சிப் படுத்தியது. இதனால் அவற்றுக்கு ஒரு மறு வரவேற்பும், புதிய கண்ணோட்டம் கொண்ட விமர்சனமும் கிட்டியது.

05. பார்பிஸோன் பாணி
Barbizon School

வடக்கு பிரான்ஸ் பகுதியில் உள்ள பார்பிஸோன் (Barbizon) கிராமத்தின் இயற்கை எழில் பல ஓவியர்களை அதன்பால் ஈர்த்தது. ஓவியர் தியோடர் ரூசொ (Theodore Rousseau) முன் நடத்திச் செல்ல, பல பிரெஞ்சு ஓவியர்கள் முன்பிருந்த நிலக்காட்சியை ஓவியமாக்கும் முறையை விட்டு விலகி இயற்கையை நேரடியாகக் கண்டு, உணர்ந்து ஓவியங்கள் தீட்டினர். முற்றிலும் கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் இயற்கையுடன் இணைந்து யதார்த்த ஓவியங்களாயின. அவற்றில் எவ்வித நாடகத் தன்மையோ, கதை சொல்லலோ இருக்கவில்லை. நிலக் காட்சிகள் அங்கு முதன்மைப்படுத்தப்பட்டன. உருவங்கள் அவற்றுடன் இழைந்து அவற்றின் நேர்த்தியைக் கூட்டின.

flickr-2620652993-image

1824 இல் ‘சலோன் த பரி’ (Salon de Paris) அமைப்பு ஓவியர் ஜான் கான்ஸ்டபிள் (John Constable)  ஓவியங்களைக் காட்சிப்படுத்தியது. அதன் தாக்கத்தில் பல இளைய ஓவியர்கள் நேரிடை இயற்கையை நோக்கி நகர்ந்தனர். 1848 புரட்சியின் போது பல ஓவியர்கள் அக்கிராமத்தை வசிக்குமிடமாகத் தேர்ந்தெடுத்தனர்.

பாம்பியரின் கலைப்பாணி என்று அறியப்படும் இந்த இயக்கத்தை முன் நடத்திச் சென்றவர்கள் என்று 1.தியோடோர் ரூசோ (Theodore Rousseau),2. ஜெ.எஃப்.மிலே (J.F.Millet), 3.ழான் பாப்டிஸ்ட் (Jean-Baptiste), 4. காமிய்ய கோரோ (Camille Corot) போன்றோரைக் கூறலாம். தியோடோர் ரூசோ, ஜெ.எஃப்.மிலே, இருவருடைய மரணமும் அக்கிராமத்திலேயே நிகழ்ந்தது.

ஹாலந்து நாட்டு நிலக் காட்சி ஓவியங்களில் இவர்களின் தாக்கம் மிகுதியாகக் காணப்படுகிறது.

[DDET ஓவியங்களைக் காண இங்கே அழுத்தவும்.]

02-venus03-cabanel-expulsion04-cabanela-index-barbizon-schoolb-index-barbizon-schoolc-index-by-rousseaui01-lart-pompierimages-liberty-romanticismimages-nymph-1850images-romantic-era-1825-50images-woman-romanticismindexd-gypsy-by-camille-corotindexe-landscape-ccorot

[/DDET]

(வளரும்)