வெங்கட் சாமிநாதன் – புத்தக வெளியீட்டு விழா

தமிழின் மூத்த கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அவர்களைக் குறித்ததொரு திறனாய்வு நூல் வரும் 30-ஆம் தேதியன்று (30-04-2011) தேவனேயப் பாவாணர் நூலகத்தில் மாலை 5.30 மணியளவில் வெளியிடப்படவிருக்கிறது. எழுத்தாளர்கள் திலீப்குமார், பா.அகிலன், சத்தியமூர்த்தி ஆகியோர் இந்நூலைத் தொகுத்திருக்கிறார்கள். பல மூத்த படைப்பாளிகளும் இப்புத்தகத்தில் வெ.சா அவர்களின் எழுத்துலகைக் குறித்து எழுதியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றவுமிருக்கிறார்கள். விழா அழைப்பிதழைக் கீழே பார்க்கலாம்.

ve-saa-book-release