தமிழினி – கலை இதழ் – http://tamilini.in
தமிழறிஞர்கள், தமிழாராய்ச்சி, தத்துவம், சிற்பக்கலை, கல்வெட்டு ஆராய்ச்சி, சமூகம், சமகாலத் தமிழ்ச்சூழல் ஆகியவற்றைக் குறித்துத் தீவிரமான பல கட்டுரைகளை வெளியிட்டு வரும் சிறந்த சிற்றிதழான தமிழினியை இப்போது இணையத்திலும் படிக்கலாம்.
உபு.காம் – http://www.ubu.com
உபு டாட் காம் என்ற தளத்தில் ஏராளமான அரிய இசைத்தொகுப்புகளையும் திரைப்படங்களையும் பதிவிடுகிறார்கள். தொடர்ந்து புதிய படைப்புகளை இணைக்கிறார்கள்.
இந்தோனேஷியா தேசத்தை சேர்ந்த கேட்சக் எனப்படும் ராமாயண வானர கானம் இங்கிருக்கிறது. பேயோட்டு சடங்கை ஒத்த இந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட நடிகர்கள் பங்கு கொள்ளும் கானம், ராமரின் உதவிக்கு வந்த வானரங்கள் தீய சக்திகளைத் தோற்கடிக்கும் நிகழ்வை அரங்கேற்றுகின்றது.
ப்ரையன் டி பால்மாவை உங்களுக்குத் தெரிந்திருக்குமோ இல்லையோ மிஷன் இம்பாஸிபிள் என்ற திரைப்படத்தை அறிந்திருப்பீர்கள். இந்தப் படத்தின் இயக்குனர் இவர்தான். ராபர்ட் டி நீரோவை அறிமுகப்படுத்தியவரும் இவரே. இவர் தன் திரை வாழ்வின் துவக்கத்தில் இயக்கிய ஆவணப்படமான ‘த ரெஸ்பான்சிவ் ஐ’ படத்தை இத்தளத்தில் இங்கே பார்க்கலாம். உலகக் கலை வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துவிட்ட ந்யூ யார்க்கின் ம்யூசியம் ஆப் மாடர்ன் ஆர்ட்டின் திறப்பு விழா நிகழ்வை இப்படம் பதிவு செய்திருக்கிறது.