ஸ்மித்சொனியன் இன்ஸ்டிட்யூட்டின் இணைய தளம் ஸ்மித்சோனியன் வைல்ட். இங்கு உலகெங்கிலும் உள்ள வனவிலங்கு சரணாலயங்களில் காமேராவைப் பொறியாக வைத்து எடுத்த இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்களை இணைத்திருக்கிறார்கள். இயற்கை சூழலில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் சிறப்பான வகைகளில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. கென்யாவில் எடுக்கப்பட்ட ஆப்பிரிக்க புஷ் யானைகளின் புகைப்படங்கள் எவ்வளவு கம்பீரமாக இருக்கின்ற பாருங்கள்.